மேலும் அறிய

கரூர் ரத்த சோகை கண்டறியும் திட்டத்தில் முன்னோடி மாவட்டம் - ஆட்சியர் பெருமிதம்

இராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் பிரபுசங்கர் மாணவ, மாணவியர்களுக்கு  உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் இரத்தசோகை கண்டறியும் ஆய்வு முகாம் நிகழ்ச்சியை  பார்வையிட்டார்.   

உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் இரத்தசோகை கண்டறியும் ஆய்வில் தமிழ்நாட்டில் முன்மாதிரி மாவட்டமாக இருக்க மாணவ மாணவியர்கள் இத்திட்டத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வேண்டுகோள்.

கரூர் ரத்த சோகை கண்டறியும் திட்டத்தில் முன்னோடி மாவட்டம் - ஆட்சியர் பெருமிதம்

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி இராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில்   மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு  உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் இரத்தசோகை கண்டறியும் ஆய்வு முகாம் நிகழ்ச்சியை  தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.
   
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
   
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைகிணங்க மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி கரூர் மாவட்டத்தில் பள்ளிசெல்லும் 6-12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு ஹீமோகுளோபின் ஒப்பீட்டு ஆய்வு தமிழகத்திலேயே முதன்முறையாக கரூர் மாவட்டத்தில்  மேற்கொள்ளபட்டுவருகிறது. இதற்கு முன்பாக, “உதிரம்உயர்த்துவோம்” திட்டத்தின்கீழ் கரூர்மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மட்டும் 25000 மாணவியர்களிடையே ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு அவர்களில்  17000 மாணவியர்களுக்கு இரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு அவர்களின் முடிவு பெறப்பட்டு அவர்களில் மிகக்குறைந்த ஹீமோகுளோபின்அளவு உள்ளவர்களுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக எளிதாக ஹீமோகுளோபின் அளவு பரிசோதிக்கும் வகையிலும் மற்றும் அதன் முடிவுகள் 1 நிமிடத்தில் செய்யப்படும் கருவி மூலம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.  இக்கருவியில் மாணவ/மாணவியர்களின் கையில் இரத்த மாதிரி சேகரித்து அதன் முடிவும், மாணவ/மாணவியர்களின் ஹீமோகுளோபின் மீட்டர் முறையில் செய்தும் அதன் முடிவையும் ஒப்பீடு செய்யப்பட உள்ளது. எனவே, இதற்கென 3000 மாணவ / மாணவியர்களிடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை இந்த முறையில் எடுக்கப்படும் 3000 மாணவ/மாணவியர்களில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படஉள்ளது.

கரூர் ரத்த சோகை கண்டறியும் திட்டத்தில் முன்னோடி மாவட்டம் - ஆட்சியர் பெருமிதம்

நமது மாவட்டத்தில் முக்கிய வகை கருவிகளை கொண்டு முதன் முதலில் இரத்த சோகை கண்டறியும் ஆய்வு முடிவுகள் நடைபெற உள்ளது.  இது சிறப்பாக அமையும் பட்சத்தில் கரூர் மாவட்டம் தான் அனைவருக்கும் முன்னோடி மாவட்டமாக திகழும். நாம் ஏற்கனவே மாணவியர்களின் பெற்றோர்களின் சம்மதத்துடன் 17,000 மாணவிகளுக்கு இரத்தசோகை கண்டறியும் ஆய்வு முடிவுகள் முடிக்கப்பட்டு உள்ளது. தற்போது இன்று முதல் மாணவிகளுடன் மாணவர்களுக்கும் இரத்தசோகை பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளது. அதன் மூலம் ஆரோக்கியமான மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியும். உடம்பில் உள்ள எல்லா பாகங்களுக்கும் இரத்தத்தின் சிவப்பணுக்கள்  என்று ஹீமோகுளோபின்  ஆக்ஸிஜனை சுமந்து செல்கிறது.  இதன் மூலம் தான் உடல் உறுப்புகள் அனைத்தும் முழு திறனுடன் சிறப்பாக செயல்படுகிறது. ஆக்சிஜன் அளவு குறைவு ஏற்படும் காரணத்தினால் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்து அதன் காரணமாக நமது செயல்பாடுகளும் திறமைகளும் குறைந்து விடுகிறது. மாணவர்களால் சிறப்பாக சிந்திக்க முடியாது செயல்பட முடியாது படிக்க முடியாமல் போய்விடும். வளர்ச்சியும் குறைவாக இருக்கும். உடம்பில் இருக்கின்ற எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் இரத்தசோகை ஏற்படுவதன் காரணத்தினால் தான். இரத்தசோகை என்பது சாதாரண வியாதியாக தான் தெரியும் ஆனால் எல்லா பிரச்சனைகளுக்கும் அதுதான் காரணம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் இரத்தசோகை வராமல் தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும் அதற்கு இரும்புசத்து மிக்க காய்கறிகள், கீரைகள், இறைச்சி வகைகளை சாப்பிட வேண்டும். குடல் புழு மாத்திரை வருடத்திற்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும். மாணவிகள் கூச்சப்படாமல் உங்களது மாதவிடாய் காலத்தை சரியாக கண்காணித்து அது குறித்து பிரச்சனைகள் ஏற்பட்டால் தனது தாயிடமோ அதன் மூலம் மருத்துவரிடம் கூறி ஆலோசனைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோல் வாரவாரம் வியாழக்கிழமை இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் இதன் மூலம் இரத்தசோகையை தடுக்க முடியும். ஹீமோகுளோபின் குறைபாடுக்கு ஏற்றவாறு  மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்.  அதன் மூலம் இரத்தசோகை இல்லாத நிலையை உருவாக்கி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் இதை உங்கள் தோழிகளிடம், தாய் தந்தையிடம் சொல்லி அவர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும் அப்பொழுதுதான் வராமல் தடுப்பதற்கு உதவியாக இருக்க வேண்டும்.  ஹீமோகுளோபின் சீராக அமைந்துவிட்டால் அனுமியா என்ற இரத்தசோகை இல்லாமல் போய்விடும் நீங்களும் அனைத்துத்துறைகளிலும் திறமையுடன் செயல்படுவீர்கள் ஆகவே கரூர் மாவட்டம் தான் இந்தியாவிலேயே இரத்தசோகை கண்டறியும் திட்டத்தையும் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது கரூர் மாவட்டம் தான் தமிழ்நாட்டில் முன்மாதிரி மாவட்டமாக எடுத்துச் செல்வதற்கு மாணவ மாணவியர்கள் திட்டத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் ரத்த சோகை கண்டறியும் திட்டத்தில் முன்னோடி மாவட்டம் - ஆட்சியர் பெருமிதம்

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கீதா, இணை இயக்குனர் (நலப் பணிகள்) மரு.ரமாமணி, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) மரு.சந்தோஷ்குமார், தேசிய நலவாழ்வு குழுமம் மரு. விஜயபுஷ்பா, மரு. ஏபிள், தலைமையாசிரியர் ஜோதிமுருகன், கரூர் வட்டாட்சியர் திரு. சிவக்குமார்  ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget