சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் 37 பயனாளிகளுக்கு வங்கி கடனுதவி வழங்கிய கரூர் ஆட்சியர்
கோரிக்கை மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் பிரபுசங்கர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று 47 பயனாளிகளுக்கு ரூ.83.62 மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், 47 பயனாளிகளுக்கு ரூ.83,61,910 மதிப்பீட்டில் ரூ.83,61,910. பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிக்கடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 479 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 65 மனுக்கள் பெறப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 3 நபருக்கு தலா 2,780 மதிப்பில் ரூ.8340 மதிப்பிலான காதொலிக்கருவிகளும், 1 நபருக்கு ரூ530 மதிப்பீட்டில் கறுப்பு கண்ணாடி மடக்கு குச்சி, 1 நபருக்கு ரூ 3500 மதிப்பீட்டில் நவின மடக்கு குச்சி மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் சார்பில் 15 நபர்களுக்கு தலா 17000 மதிப்பில் 2,55,000 இயற்கை மரணம் உதவித்தொகைக்கான காசோலையும், தாட்கோ திட்டத்தின் சார்பில் சுய உதவிக்குழு , தொழிற் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் 37 பயனாளிகளுக்கு ரூ.80,94,490 மதிப்பில் மானியத்துடன் வங்கி கடனுதவியும் ஆக மொத்தம் 47 பயனாளிகளுக்கு ரூ.83,61,910 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் , சீனிவாசன், தனித்துணை ஆட்சியர் திரு.சைபுதீன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.