மேலும் அறிய

பண்டிகை கால பலகாரங்களில் பிரச்சனையா? புகாரை தொலைபேசியில் தெரிவிக்கலாம் - கரூர் கலெக்டர்

கரூர் மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 29 மனுக்கள் பெறப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். இந்த கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டுமனை பட்டா, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகளை கேட்டு, மொத்தம் 360 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 29 மனுக்கள் பெறப்பட்டது.

பண்டிகை கால பலகாரங்களில் பிரச்சனையா? புகாரை தொலைபேசியில் தெரிவிக்கலாம் - கரூர் கலெக்டர்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்குச் சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு உடனே நடவடிக்கை எடுத்தும், பிற மனுக்களுக்கு ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 4999 வீதம் ரூ.9,998 மதிப்பில் காதோலி கருவிகளையும், ஒரு பயனாளிக்கு ரூ. 380 மதிப்பில் ஒளிரும் மடக்கு குச்சியும், ஒரு பயனாளிக்கு ரூ. 1480 மதிப்பில் நடைமுறை பயிற்சி உபகரணமும், வருவாய்த்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை சான்றும், 1 பயனாளிக்கு உட்பிரிவு பட்டாவுக்கான சான்றும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையினர் சார்பாக 10 பயனாளிகளுக்கு தலா ரூ. 4871 வீதம் ரூ. 48710 மதிப்பில் இலவச சலவைப் பெட்டியும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 4 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கு தற்காலிக ஒதுக்கீட்டான ஆணைகளையும் என மொத்தம் 24 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், திட்ட இயக்குனர் மந்திராசலம், தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பண்டிகை கால பலகாரங்களில் பிரச்சனையா? புகாரை தொலைபேசியில் தெரிவிக்கலாம் - கரூர் கலெக்டர்

பண்டிகை காலங்களில் உணவுப்பொருட்கள் புகாரை தொலைபேசியில் தெரிவிக்கலாம் 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தீபாவளி பண்டிகை காலங்களில் இனிப்பு, பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவுப் பொருட்களை தயாரிப்பவர்கள் மற்றும் பண்டிகை காலங்களில் இனிப்பு மற்றும் கார திண்பண்டங்கள், சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து, உரிமம் பெற்று பொதுமக்களுக்கும் விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

 உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான வர்ணங்களையோ உபயோகிக்க கூடாது எனவும், உணவு பாதுகாப்பு துறை ஆய்வின் போது, தரமற்ற பொருட்கள் மற்றும் எண்ணெய்கள் பலமுறை பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், பறிமுதல் செய்யப்பட்டு  பொருட்கள் அழிக்கப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு விரைவு சீட்டு (லேபிள்) விடும்போது, அதில் தயாரிப்பாளர்களின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

பண்டிகை கால பலகாரங்களில் பிரச்சனையா? புகாரை தொலைபேசியில் தெரிவிக்கலாம் - கரூர் கலெக்டர்

மேலும் உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமிகள் தொற்று இல்லாத வகையில், சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திட வேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.அனைத்து வகையான உணவு வணிகர்களும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 இன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து, உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான இணையதளம் மூலமும் தெரிவிக்கலாம். மேலும், உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் தொலைபேசி எண் 9444042322 எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் எனவும் கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget