கரூர்: பாஜக உறுப்பினர் சேர்க்கை, பொங்கல் விழா கொண்டாட்டம் ஆலோசனை கூட்டம்
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அமைப்பு சார்பான பணிகள் பொங்கல் திருநாள் விழா கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அமைப்பு சார்பான பணிகள் பொங்கல் திருநாள் விழா கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கரூர் மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப் படுத்துவதும் பூத் கமிட்டி மற்றும் கிளை கமிட்டிக்கான வேலைகளை தீவிர படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது. வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் நல்லாட்சி தினமாக அறிவித்து அதற்கான நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்தும், பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் கிளை கமிட்டி முதல் மண்டல் மற்றும் மாவட்டம் வரை நிகழ்ச்சியைமிகச் சிறப்பாக நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு கரூர் மாவட்ட தலைவர் திரு. செந்தில்நாதன் அவர்கள் தலைமை வகித்தார்.பார்வையாளர் திரு.சிவ சுப்பிரமணியன் கலந்து கொண்டு வழி காட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள். மாவட்ட அணி, பிரிவு தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
SDPI-கட்சியின் கரூர் மாவட்ட பொதுக்குழு இன்று நடைபெற்றது.
SDPI-கட்சியின் கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று 21.12.2022 காலை, ஆரியாஸ் ஹோட்டல் மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஜின்னா அவர்கள் தலைமை தாங்கினார், சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அபுபக்கர் சித்தீக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அப்துல் அஜீஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார், பள்ளப்பட்டி நகர செயலாளர் ஜாபர் அலி வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஹாஜா மைதீன் நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்வில் லிங்கம நாயக்கன்பட்டியின் SDPI கட்சி கவுன்சிலர் ஷேக் பரீத், கரூர் நகர தலைவர் பாஷா, கரூர் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். இந்நிகழ்வில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மாஜி அமைச்சர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்கு.
கரூர் கலெக்டர் அலுவலகம் எதிரே சட்டவிரோதமாக கூடியதாக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. அப்போது அதிமுக கவுன்சிலர்கள் நிர்வாகிகளுடன் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் வந்தார். மாவட்ட அதிமுக கவுன்சிலர்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ளே அனுமதித்த போலீசார் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினரை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் சட்டவிரோதமாக கூடியதாக போலீஸ் எஸ்ஐ நாகராஜன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது தான்தோன்றி மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.