எனக்கு எந்த உதவியும் தேவையில்லை, இதை மட்டும் செய்தால் போதும்... தூய்மை பணியாளரின் எதார்த்த பேச்சு ஆட்சியருக்கு கேட்டுகுமா?
கலெக்டருக்கு மனு கொடுக்கணும், கலெக்டர் இன்னும் காணோம் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர் எதார்த்த பேச்சு.
எனக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வேறு எந்த உதவியும் செய்யத் தேவையில்லை, வீடு மட்டும் கட்டித் தந்தால் போதும் என தூய்மை பணியாளர், தனது எதார்த்த பேச்சால் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உதயமான முதல் தற்போது வரை சொற்ப கூலிக்கு எனது பணியை செய்து வருவதாகவும் பணி நிரந்தரம் அல்லது வீடு கட்டித்தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதார்த்த பேச்சால் கோரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தூய்மை பணியாற்றும் அமிர்தம்.
தான்தோன்றி மலை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்டப்பட்டு அதன் தொடர்ச்சியாக தற்போது வரை வாரத்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் தான்தோன்றி மலை பகுதியைச் சேர்ந்த அமிர்தம் என்பவர் தனது எதார்த்த பேச்சால் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் கூறும் பொழுது, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் துவங்கப்பட்ட நாள் முதல் அப்பொழுது நாள்தோறும் 50 ரூபாய் கூலிக்கு ஒப்பந்த பணியில் சேர்ந்தேன். தொடர்ந்து தற்போது வரை 10 முதல் 15 ஆண்டுகள் பணியாற்றி விட்டேன் எனக்கும் தற்போது 300 ரூபாய் கூலி வழங்கப்பட்டு வருகிறது. எனக்கு ஒரு மகன் இரண்டு மகள்களும் உள்ளனர். தற்போது வரை தான்தோன்றி மலைப் பகுதியில் வாடகை குடியிருப்பு வீட்டில் வசித்து வருகிறேன். இந்த பத்தாண்டு காலத்தில் தற்போது சில மாதத்திற்கு முன்பு இலவச வீட்டு மனை பட்டா மணவாடி அருகே வழங்கினர். மேலும் பஞ்சாயத்தில் சென்று வீடு கட்ட கடனுதவி கேட்டால் இல்லை என்று மறுத்து விட்டார்கள்.
இதனால் நான் அரசாங்கம் வழங்கிய பட்டா நிலத்தை அப்படியே வீடு கட்டாமல் வைத்துள்ளேன் என்ன வழி என்று தெரியவில்லை. எனக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வேறு எந்த உதவியும் செய்யத் தேவையில்லை வீடு மட்டும் கட்டித் தந்தால் போதும் என தனது எதார்த்த பேச்சால் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆட்சியர் பல்வேறு பாமர மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் ஒப்பந்த தூய்மை பணியாற்றும் பெண் அமிர்தம் அம்மாவிற்கு கருணை காட்டுவாரா என காத்திருப்போம்.