அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதிகள் நிறைவேற்றாத முதல்வர் - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர் மணிமேகலை
இரண்டு ஆண்டுகளாகியும் அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாத முதல்வர் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர் மணிமேகலை பேட்டி.

கரூர் மாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு சார்பில் மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டல நிர்வாகிகளுக்கு இயக்க பயிலரங்கம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் இன்று தொடங்கிய பயிலரங்கத்தில் கல்விக் கொள்கை, எதிர்கொள்ளும் சவால்கள், அறிய வேண்டிய அரசாணைகள் உள்ளிட்டவைகளை பயிற்சி பட்டறை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மணிமேகலை செய்தியாளர் சந்திப்பில், "தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கவும், மத்திய அரசுக்கு இணையான ஊதிய வழங்கவும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்களுக்கு தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்த தற்போதைய முதல்வர் இரண்டு ஆண்டுகள் முடிந்தும் இதுவரை தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை, சரண்டர் ஒப்படைப்பு தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி நிறுத்தி வைப்பது போன்ற பல்வேறு நலன்களை ஆசிரியர் கூட்டமைப்பு எதிராக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு ஆசிரியர் என்று 1000-க்கு மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. எனவே காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி தவிர வேறு பணிகளும் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது,கற்பிக்கும் பணிகள் மட்டுமே ஆசிரியர்களுக்கு தர வேண்டும்,பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும்.
கரூரில் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் மனோகரா கார்னர் காமராஜர் சிலை முன்பு அவரது உருவப்படத்திற்கு தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை அமைப்பினர் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் அணி நிர்வாகி பழ.ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயே ஆட்சியை எதிர்த்து விடுதலைக்காக போராடிய தலைவர்களில் தீரன், சின்னமலை குறிப்பிடத்தக்கவர். கிழக்கிந்திய கம்பெனியினரின் ஆதிக்கத்தை விரும்பாத சின்னமலை தொடர்ந்து எதிர்த்து வந்தார். தீரன் சின்னமலையை போரில் முடியாது என்று கருதிய ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி வலையில் சிக்கவைத்து சின்னமலையை செய்து சங்ககிரிக் கோட்டைக்கு அழைத்துச் சென்று விசாரணை தூக்கிலிட்டனர்.

தீரன் சின்னமலை தியாகத்தைப் போற்றி நினைவு கூறும் வகையிலும் அவரது வீரதீர செயல்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளத்தக்க வகையிலும் அவரது பிறந்தநாள் விழா தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.





















