மேலும் அறிய

திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் பேருந்து நிலையம் அருகே, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில், கரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

கரூர் திருமாநிலையூர் பகுதியில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய பேருந்து நிலையம் வேண்டும் என பல்வேறு ஆண்டுகளாக, மாவட்ட மக்கள் அரசியல் கட்சியிடம் கோரிக்கை வைத்து தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதியாக புதிய பேருந்து நிலையம் கட்டாயம் அமையும் என வாக்குறுதி அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் முயற்சியால் சுக்காலியூர் அருகே இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, கரூர் வருகை புரிந்த போது அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

அதன் தொடர்ச்சியாக, அந்தப் பணிகள் துவக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் செய்தி அறிவிக்கப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திராவிட முன்னேற்ற கழகம், ஆட்சியமைந்தது. அப்போது கரூர் பேருந்து நிலையம் அருகே, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில், கரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்தார். அவர் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் புதிய பேருந்து கட்டுமான பணிக்காக பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார்.

திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

அப்பொழுது முந்தைய ஆட்சி காலத்தில் தேர்வு செய்யப்பட்ட, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமையும் என பரவலாக பேசப்பட்டது. அதே நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் இலங்கை தமிழர்களுக்காக மறுவாழ்வு முகாம் அமைக்கும் பணியும் தொடங்கியது. இதனை, அப்பகுதியில் உள்ள சில சமுதாய தலைவர்கள் எதிர்த்தனர். நீதிமன்றத்திற்கும் சென்றனர். நீதிமன்றத்தில் கரூர் மாவட்டத்திற்கு விரைவாக புதிய பேருந்து நிலையம் கட்ட, இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தேர்வு செய்யப்பட்ட திருமாநிலையூர் பகுதியில் பேருந்து நிலையம் அமையும் என தெரிவித்தனர்.

திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

அதனைத் தொடர்ந்து, அதன் பணிகள் தொடர்ச்சியாக, மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் புதிய பேருந்து நிலையம் தொடங்குவதற்காக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிதிகளும் ஒதுக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்டத்திற்கு முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை புரிந்தார். அந்த நிகழ்ச்சி திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அமையும் இடத்திலே நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் கரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து நிலையம் திருமண பகுதியில் அமையும் என வாக்குறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை 12:30 மணியளவில் தொழில்துறை அமைச்சர் த.மு.அன்பரசன் மற்றும் தமிழக மின்சாரம், மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பொதுமக்களை நீண்ட நாள் கோரிக்கையாக கரூர் மாவட்டத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி இன்று தொடங்க உள்ளது என்பதால், மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் - நினைத்ததை சாதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

கடந்த ஆட்சிக் காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் வேறு ஒரு பணி தொடங்கி விட்டதால், நீதிமன்றமும் அந்த இடத்தில் பேருந்து நிலைய அமைய வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தனர். ஆகவே, இன்று தொடங்க உள்ள புதிய பேருந்து நிலையம் பூஜை பணி விறுவிறுப்பாக நடைபெற்று, அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய பேருந்து நிலையம் அமைய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையம் அமைய, இந்த இடம் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, முன்பே தேர்வு செய்த இடத்தில் மீண்டும் திமுக ஆட்சிக் காலத்தில் மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி இந்த பணிகளை முன்னெடுத்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது. நினைத்ததை முடிப்பவன் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது அந்த பாடலுக்கு இணையாக கரூரில் எங்கள் புரட்சித்தலைவர் நினைத்ததை முடித்துவிட்டார் என்ற கருத்துக்களும் பரிமாறப்பட்டு வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Embed widget