சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கழன்று விழுந்த லாரியின் டீசல் டேங்க்
250 லிட்டர் டீசல் உள்ள டேங்க் ஒன்று கழண்டு விழுந்ததால் அதனை லாவகமாக கவனித்த வாகன ஓட்டிகள் அங்கு பெரும் சம்பவம் ஏதும் நடக்காத வண்ணம் விரைவாக சரி செய்தனர்
தமிழகம் முழுவதும் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலான நிலையில் மாவட்டங்கள் தோறும் இரவு நேரங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம், மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரிக்காரம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது லாரியில் கீழ் பகுதியில் இருந்த டீசல் டேங்க் ஒன்று எதிர்பாராதவிதமாக கழண்டு விழுந்து விட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மேட்டூர் அணையின் நீர் வரத்து 3,629 கன அடியில் இருந்து 2,564 கன அடியாக குறைந்தது
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ரவுடிகள் பட்டியலில் மாணவர்கள் சேர்ப்பு - காவல்நிலையம் முன் பெண்கள் தீக்குளிக்க முயற்சி
இதனை லாரி ஓட்டுனர் கவனிக்காமல் தொடர்ந்து லாரியை இயக்கிய நிலையில் லாரியை பின்தொடர்ந்து வந்த வாகன ஓட்டிகள் திடீரென லாரியில் இருந்து ஏதோ ஒரு பொருள் கீழே விழுவதை உன்னிப்பாக கவனித்த அவர்கள் இந்த டீசல் டேங்க் கழண்டு விழுந்தது முன் சென்ற லாரியை ஓவர்டேக் செய்து அந்த லாரி ஓட்டுநர் இடம் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- திருவாரூரில் விவசாயிகள் சாலை மறியல் - மழை பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 வழங்க கோரிக்கை
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- திருவண்ணாமலை கோயிலில் 1.78 கோடி உண்டியல் வசூல்
உடனே திகைத்துப்போன ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு இறங்கி பார்த்தபோது டீசல் டேங்க் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து மீண்டும் லாரியை யூடர்ன் போட்டு இயக்கினார். இதுகுறித்து லாரி ஓட்டுனர் இடம் விசாரித்தபோது-உத்திரப்பிரதேசத்தை சார்ந்த சுமீத் என்ற ஓட்டுநர் ஆந்திரா மாநிலம் சித்தூரில் பேட்டரிகளை ஏற்றிக் கொண்டு மதுரை சென்று இறக்கி விட்டு மீண்டும், சித்தூர் வழியாக உத்தரப்பிரதேசம் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தியாகிகள் அனுபவித்த துன்பத்திற்கு கடன் பட்டுள்ளோம் - தியாகியின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சேலத்தில் உடலில் கல்லை கட்டிய நிலையில் ஏரியில் இருந்து பெண் சடலமாக மீட்பு
அப்போது மதுரை -சேலம் தேசிய நெடுஞ்சாலை கரூர் பகுதியில் வந்தபோது லாரியில் இருந்த இரண்டு டீசல் டேங்க் இருந்த நிலையில் 250 லிட்டர் டீசல் உள்ள டேங்க் ஒன்று கழண்டு விழுந்ததால் அதனை லாவகமாக கவனித்த வாகன ஓட்டிகள் அங்கு பெரும் சம்பவம் ஏதும் நடக்காத வண்ணம் விரைவாக சரி செய்தனர். தமிழகத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் கரூர் அருகே 250 லிட்டர் டீசல் உடன் இருந்த லாரி டேங்க் கழண்டு ஓடிய நிகழ்வு கரூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- வழிபாட்டுத்தலங்கள் மூடல் - நாகப்பட்டினம் வழிபாட்டுத் தலங்களில் தீவிர கண்காணிப்பு