மேலும் அறிய

CM Stalin : காவிரி ஆற்றில் மூழ்கி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த சோகம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CM Stalin :  கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மாணவிகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த பிளிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6,7,8ஆம் வகுப்புகள் படிக்கும் மாணவிகள் 15 பேரை கால்பந்து போட்டியில் விளையாட ஆசிரியர்கள் ஜெயசகேவிய எம்ப்பாயுலு, திலகவதி ஆகியோர் ஆம்னி வேனில் அழைத்துக் கொண்டு திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர். 

காலை 10 மணியளவில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள் தோல்வியை தழுவியதை அடுத்து அவர்கள் கல்லூரியை விட்டு வெளியேறி கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை சுற்றிப் பார்க்க வருகை தந்துள்ளனர். மாயனூர் கதவணைப் பகுதியை சுற்றிப் பார்த்த பிறகு சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கி சென்றனர். 

ஆற்றின் நடுவே தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் மணலில் நடந்து சென்று நடு ஆற்றில் இருந்த தண்ணீரில் குளித்துள்ளனர். ஆழமான பகுதி என்பதால் குளித்துக் கொண்டிருந்த மாணவிகளில் 8ம் வகுப்பு மாணவி தமிழரசி, 7ம் வகுப்பு மாணவி சோபியா, 6ம் வகுப்பு மாணவிகள் இனியா, லாவண்யா ஆகிய 4 பேர் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர். 

மாணவிகளின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கரூர் மற்றும் முசிறி தீயணைப்பு நிலைய வீரர்கள் பரிசல் மூலமாகவும்,  தண்ணீரில் இறங்கியும் தேடினர். அப்போது ஒருவர் பின் ஒருவராக உடல்கள் மீட்கப்பட்டது. 

நிவாரணம் அறிவிப்பு

இதனை அடுத்து, உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி  உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து வெளியிட்டடுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மாவட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கால்பந்து விளையாட்டில் கலந்துகொண்ட பின்னர் இன்று 15.2.2023 காலை கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோவில் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, சோபியா த/பெ.வெள்ளைச்சாமி (7ம் வகுப்பு). தமிழரசி த/பெ. ராஜ்குமார் (8ம் வகுப்பு) இனியா த/பெ.மோகன்குமார் (6ம் வகுப்பு) மற்றும் லாவண்யா த/பெ. பெரியண்ணன் 6ம் வகுப்பு) ஆகிய நான்கு மாணவிகள் எதிர்பாராதவிதமாக சுழலில் சிக்கி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

மேலும் இவ்விவகாரத்தில் புதுக்கோட்டை பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் செபகாயூ இப்ராஹிம், பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget