கரூரில் 2ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா; முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனை
ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரிகளில் சார்ந்து இருக்கின்ற மாணவி, மாணவிகள் இந்த புத்தகத் திருவிழாவில் பங்கு கொள்வதற்கான பஸ் வசதி, குடிநீர் வசதிகள் மற்றும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் .
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் மாபெரும் 2 ஆம் ஆண்டு கரூர் புத்தக திருவிழா நடைபெறுவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் இரண்டாவது முறையாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி , 2 ஆம் ஆண்டு மாபெரும் கரூர் புத்தகத் திருவிழா அரசு விழாவாக வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது. கடந்தாண்டு போலவே இந்தாண்டு குறிப்பாக 100 அரங்கில் ஏறத்தாழ பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறக்கூடிய அளவிற்கு அரங்குகள் அமைக்கப்பட வேண்டும், காலை 10 மணி முதல் தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடக்க கூடிய அளவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் . குறிப்பாக மாலை 4 மணி முதல் 6 மணி வரை கலை நிகழ்ச்சிகளும், 6 மணி முதல் 8 மணிவரை நற்சிந்தனைகள் கருத்தரங்கம், பட்டிமன்றம், சிந்தனை சொற்பொலிவு உள்ளடங்கிய சான்றோர்கள், பெரியோர்கள் பங்கு பெறக்கூடிய வகையில் நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
மேலும், ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரிகளில் சார்ந்து இருக்கின்ற மாணவி, மாணவிகள் இந்த புத்தகத் திருவிழாவில் பங்கு கொள்வதற்கான பஸ் வசதி, குடிநீர் வசதிகள் மற்றும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் . இந்த மாபெரும் கரூர் புத்தக திருவிழா சிறப்பாக அமைய அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக அனைத்துதுறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர்கள் கண்ணன், கவிதா (நிலம் எடுப்பு, மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டயுதாபாணி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.