மேலும் அறிய
Advertisement
தூத்துக்குடி : கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்
கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்படும் மதுப்பாட்டில்கள்- குரும்பூரில் 22 இலட்சம் மதிப்பிலான மாட்டு தீவனத்துக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூருவில் இருந்து நண்பர்களுக்காக ரயிலில் மதுபாட்டில்களை பதுக்கி கொண்டுவந்த கோவில்பட்டியை சேர்ந்த 3 பேர் கைது செய்யட்டதுடன், 37 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் வேலைக்காக சென்றவர்கள் நண்பர்களுக்காக மைசூர-தூத்துக்குடி செல்லும் விரைவு ரெயிலில் மதுபாட்டில்களை பதுக்கி கொண்டு வந்த கோவில்பட்டியை சேர்ந்த மாரிச்செல்வம், மணிகண்டன், பேச்சிமுத்து ஆகிய 3 பேரை ரெயில்வே போலீசார் பிடித்து கோவில்பட்டி மது விலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக தெரிந்து ரயில்வே போலீசார் சோதனை செய்தபோது 3 பேரும் சிக்கியுள்ளனர். 3 பேரையும் கைது செய்த மதுவிலக்கு போலீசார் 7 ஆயிரம் மதிப்புள்ள 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. ஆனால் வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை போலீசார் தடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரெயில் மூலமாக மது பாட்டிகள் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரெயில் நிலையங்களில் வெளிமாநிலங்களில் இருந்து பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் இன்று மைசூர் - தூத்துக்குடி ரெயிலில் வந்த பயணிகளிடம் ரெயில்வே இரும்பாதை போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த மாரிச்செல்வம், வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த மணிகண்டன், கடலையூரைச் சேர்ந்த பேச்சிமுத்து3 பேரின் பைகளை சோதனை செய்தபோது அதில் 7 ஆயிர ரூபாய் மதிப்புள்ள 37 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையெடுத்து போலீசார் 3 பேர் மற்றும பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் ஆகியவற்றை கோவில்பட்டி மது விலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெங்களூருவில் வேலைக்காக சென்றுவிட்டு ஊருக்கு கிளம்பியபோது, கோவில்பட்டியில் உள்ள நண்பர்கள் 3 பேரை தொடர்பு கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கவில்லை, மது கிடைப்பதில் சிரமமாக உள்ளது. எனவே மது வாங்கி வரும் படி கூறியதாகவும், இதையடுத்து நண்பர்களுக்காக மது வாங்கி வந்ததாகவும் கைது செய்யப்பட்ட 3 பேரும் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன், கர்நாடகாவில் இருந்து மாட்டுத்தீவனம் ஏற்றி வந்த லாரியில் மாட்டுத் தீவனத்துக்கிடையே மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட 22 இலட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டத்தில் மது குடிக்காததால் சானிடசைரை குடித்து திருச்செந்தூரில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது டாஸ்மாக் சரக்குகள் கிடைப்பதாகவும் குறைந்தவிலை மது தற்போது ரூ 650 முதல் விற்கப்படுவதாகவும் மதுப்பிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion