டிவி நிகழ்ச்சியில் வார்த்தையை விட்ட ஊடகவியலாளர்; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
'மரபையும் கண்ணியத்தையும் இன்று மீறிவிட்டேன். என் நேயர்கள் என்னை மன்னிக்கவும்' என ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பெகசஸ் போன் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பான பிரபல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் வெங்கடேஷ் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அவதூறாகப் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கண்டனத்துக்குள்ளாகி வருகிறது.
பெகசஸ் போன் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பான விவாத நிகழ்ச்சி நேற்று பிரபல தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் நடந்தது.அதில் பங்கேற்றுப் பேசிய பத்திரிகையாளர் வெங்கடேஷ் நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் பெண்களை அவமதிக்கும் வகையில் நாக்கூசும் வகையிலான சொற்களைப் பயன்படுத்திப் பேசினார். உடனடியாக நெறியாளர் அவரை இடைமறித்து ‘சபை நாகரிகத்துடன் பேசுங்கள்’ என எச்சரிக்கை செய்தார். சுதாரித்துக்கொண்ட வெங்கடேஷ் மீண்டும் பெகசஸ் பற்றிப் பேசத் தொடங்கினார்.
இத்தனை ஆண்டுகளாக தொலைக்காட்சி விவாதங்களில் நான் கட்டிக் காத்து வந்த மரபையும் கண்ணியத்தையும் இன்று மீறிவிட்டேன். என் நேயர்கள் என்னை மன்னிக்கவும்.
— R. Venkatesh (@rvrv30) August 11, 2021
உடனடியாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார் வெங்கடேஷ்,’இத்தனை ஆண்டுகளாக தொலைக்காட்சி விவாதங்களில் நான் கட்டிக் காத்து வந்த மரபையும் கண்ணியத்தையும் இன்று மீறிவிட்டேன். என் நேயர்கள் என்னை மன்னிக்கவும்’ என ட்வீட் செய்திருந்தார்.
ஆனால் மன்னிப்பு கேட்டும் வெங்கடேஷின் இந்தப் பேச்சு வலுத்த எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது... நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தனது ட்வீட்டில் 'பெண் பத்தினியா இல்லையா என்பதை தாண்டி சிந்திக்ககூடிய அளவு இவரைப்போன்றவர்களின் அறிவு எப்போது வளரும்.’ எனக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண் பத்தினியா இல்லையா என்பதை தாண்டி சிந்திக்ககூடிய அளவு இவரைப்போன்றவர்களின் அறிவு எப்போது வளரும். pic.twitter.com/COMGZna1Af
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 12, 2021
’பத்திரிகையாளன் நிலைமையை பாரீர். ! இந்தக் கேவலங்களை அனுமதிக்கவே கூடாது' என சக பத்திரிகையாளரான ஐயன் கார்த்திகேயன்
பத்திரிகையாளன் நிலைமையை பாரீர். ! இந்தக் கேவலங்களை அனுமதிக்கவே கூடாது pic.twitter.com/Zurd4ZeFIL
— Iyan Karthikeyan (@Iyankarthikeyan) August 12, 2021
பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் தனது ட்வீட்டில் 'பதில் சொல்ல முடியாத பல கேள்விகளுக்கு' எப்போதும் அது தான் பதிலாக இருந்திருக்கிறது. ஒரு பொது ஊடகத்தில் கடும் கண்டனத்துக்குரிய இந்த நிகழ்வு, இனி தொடராமல் இருப்பது தொலைக்காட்சிகள் காக்க வேண்டிய அறம்’ எனக் கூறியுள்ளார்.
பெகாசஸ் பதில் சொல்ல முடியாத கேள்வி அல்ல. பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் பதில் சொல்லி இருக்கிறது.
— Kavitha Muralidharan (@kavithamurali) August 12, 2021
ஒரு பெண் பற்றிய இழிவான பேச்சுகளும் பதில் சொல்லாமல் தாண்டிச் செல்லப்பட வேண்டியதில்லை. அது தண்டனைக்குரிய குற்றம். நேற்று சன் நியூஸ் விவாதத்தில் வெங்கடேஷ் செய்தது தனி மனித தாக்குதல்.





















