மேலும் அறிய

பெரியாரை அவமானப்படுத்த முடியாது; நினைவுபடுத்த மட்டுமே முடியும்: கமல்ஹாசன்

பெரியாரை அவமானப்படுத்த முடியாது எனவும் நினைவு படுத்த மட்டுமே முடியும் எனவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

பெரியாரை அவமானப்படுத்த முடியாது எனவும் நினைவு படுத்த மட்டுமே முடியும் எனவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது.” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் பகுதியில் பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் உள்ளன. அப்பகுதியில் திராவிடர் கழகத்தினர் நடத்தி வரும் பகுத்தறிவு படிப்பகம் முன்பாக பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் கொரோனா பரவல் காரணமாக  ஊரடங்கு  அமலபடுத்தப்பட்டு உள்ளதால், அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் பெரியார் சிலையை அவமரியாதை செய்துள்ளனர். பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவிப்பொடி தூவிவிட்டும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று காலையில் அப்பகுதி மக்கள் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டு இருப்பதை பார்த்துள்ளனர். இது குறித்து அப்பகுதி திராவிடர் கழகத்தினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து பெரியார் சிலை முன்பு திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்துத்துவா அமைப்பினர் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்து இருப்பதாகவும், அவர்கள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் திராவிடர் கழகத்தினர் தெரிவித்தனர். கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு வருவதாகவும், இது போன்ற செயல்களை இந்துத்துவா அமைப்பினர் கைவிட வேண்டுமெனவும் கூறிய அவர்கள், இல்லையெனில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

பெரியாரை அவமானப்படுத்த முடியாது; நினைவுபடுத்த மட்டுமே முடியும்: கமல்ஹாசன்

இது குறித்து தகவல் அறிந்து வந்த போத்தனூர் காவல் துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து திராவிடர் கழகத்தினர் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் செருப்பு மாலை அகற்றியதோடு, பெரியார் சிலையை சுத்தம் செய்தனர். பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget