மலைவாழ் தொடக்கப்பள்ளியில் மாணவிகளே பாத்திரம் கழுவும் அவலம்... கொந்தளிப்பில் பெற்றோர்கள்
கல்வராயன் மலையில் மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் சமையல் பாத்திரங்களை மாணவிகளே கழுவிடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் சமையல் பாத்திரங்களை மாணவிகளே கழுவிடும் வீடியோ வெளியாகிய நிலையில் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலைவாழ் தொடக்கப்பள்ளியில் மாணவிகளே பாத்திரம் கழுவும் அவலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை அருகே உள்ள இன்னாடு கிராமத்தில் இயங்கி வரும் அரசு மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியில் காலை உணவு அருந்திய பள்ளி மாணவிகள், சமையல் பாத்திரங்களை மாணவிகளே கழுவிடும் வீடியோ வெளியாகி பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.
எனவே மாணவிகளை பாத்திரங்களை கழுவிடும் பணியில் ஈடுபட வைத்த ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ள நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது போன்ற பணிகளை மேற்கொள்ள அந்த உண்டு உறைவிட பள்ளியில் பணியாற்றும் சமையல் மற்றும் சமையல் உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Fengal Cyclone LIVE: இன்று இரவு முதல் மழை ஆரம்பிக்கும்.. புயல் வலுவானதாக இருக்காது!
சேலத்தில் ஆசிரியருக்கு மாணவர்கள் காலை அமுக்கி விடும் வீடியோ வைரல்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கிழக்கு ராஜாபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் ஜெயபிரகாசுக்கு மாணவர்கள், காலை அமுக்கி விடும் வீடியோ சமீபத்தில் வைரலானது. இதையடுத்து கணித ஆசிரியர் ஜெய பிரகாசை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டார்.
துடைப்ப குச்சிகள் உருவி கீழே நிறுத்தி வைத்திருந்த தலைமை ஆசிரியர் கார் மீது விழுந்ததால் மாணவனை அடித்த தலைமை ஆசிரியர்...
திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த பாப்பாபட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தா.பேட்டை ஒன்றியம் ஜடமங்கலத்தை சேர்ந்த 15வயது மாணவன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 22ம் தேதி பள்ளி கட்டிட மாடியில் உள்ள வகுப்பறையை கூட்டியுள்ளார். அப்போது தவறுதலாக துடைப்ப குச்சிகள் உருவி கீழே நிறுத்தி வைத்திருந்த தலைமை ஆசிரியர் சந்திரமோகனின் (60) கார் மீது விழுந்தது. இதனால் கோபமடைந்த அவர் மாணவனை பிரம்பால் அடித்துள்ளார். இதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின்படி தொட்டியம் போலீசார் வழக்குப்பதிந்து தலைமை ஆசிரியர் சந்திரமோகனை நேற்று கைது செய்தனர்.
அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி
அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் ஆகும். இவை பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை, பொதுப் பிரிவினர் அளவிற்கு இணையாகக் கொண்டு வர அரசால் எடுக்கப்பட்ட முயற்சியாகும். இந்தப் பள்ளியில் மாணவர்கள் கட்டாயம் அங்கேயே தங்கி படிக்க வேண்டும்.