மேலும் அறிய

Kallakurichi Incident: நல்லடக்கம் செய்ய உடலை பெற்றுக் கொள்ளுங்கள் - மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்

கள்ளக்குறிச்சி மாணவியின் மறு உடற்கூராய்வு தொடர்பான தகவலை உயிரிழந்த மாணவி வீட்டில் குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் நோட்டீஸாக ஒட்டியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாணவியின் மறு உடற்கூராய்வு தொடர்பான தகவலை உயிரிழந்த மாணவி வீட்டில் குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நேற்று (19.07.2022) மறு உடற்கூராய்வு பரிசோதனை நடைபெறுவதால் பெற்றோர் தரப்பில் ஆஜராக வேண்டும் என்று வட்டாட்சியர் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. குறிப்பாக வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தாய் செல்விக்கும், அவர்கள் தரப்பு வழக்கறிஞருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் யாரும் ஆஜராகவில்லை. இந்த நிலையில் மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை‌யில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் உடலை நல்லடக்கம் செய்ய பெற்றுக் கொள்ளும் படி குற்ற பிரிவு குற்றப்புலனாய்வு துறை அதிகாரி சார்பில் நோட்டீஸாக ஒட்டப்பட்டுள்ளது.

Kallakurichi Incident: நல்லடக்கம் செய்ய உடலை பெற்றுக் கொள்ளுங்கள் - மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி விழுந்ததாக கூறப்படும் இடத்தில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் மரணித்ததது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். பள்ளியில்  மாணவி விழுந்ததாக கூறப்படும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சிபிசிஐடி குழுவினர் ஜியாஉல்ஹக் தலைமையில் ஆய்வு செய்தனர்.

அப்பொழுது மாணவி தங்கி இருந்த விடுதியின் அறை மற்றும் அவர் பயன்படுத்திய பகுதிகள், மேலும் அவர் விழுந்ததாக கூறப்படக்கூடிய இடங்களையும் கூர்ந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாணவியை போல் உருவ பொம்மையை தயார் செய்து அதை மாடியில் இருந்து  குதிக்க வைத்து பரிசோதனை செய்தனர். மேலும் மாணவி கிடந்த இடத்தில் தன்மை, விழுந்த இடத்தின் தூரம் உள்ளிட்டவைகளை பதிவு செய்து கொண்டனர்.

https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/14/3f4aff22de4d862e7945e9d57b3311d81657783796_original.jpg

நண்பகல் 12 மணிக்கு வந்த சிபிசிஐடி குழுவினர் மூன்று மணி நேரம் பள்ளி வளாகத்தில் இருந்து ஆய்வு பணியை செய்தனர். அதேபோல்  மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனையை மருத்துவர்கள் குழுவினர் செய்தனர். மாணவியின் மறு உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையை நாளை  உச்ச நீதிமன்றத்தில் மருத்துவ குழுவினர் தாக்கல் செய்ய உள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின்படி நடக்கும் இந்த பிரேத பரிசோதனை, வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் மறு உடற்கூராய்வு பரிசோதனை நிறைவடைந்ததை மருத்துவ குழு சார்பில் பள்ளி மாணவி பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவி உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படும் எனவும் மருத்துவ குழுவினர் தகவல் செய்யவுள்ளனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் மறு உடற்கூராய்வு நிறைவடைந்தது. தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மரணித்த மாணவியின்‌ உடல் மறு உடற்கூராய்வு மூன்று மணி நேரத்திற்கு மேல் இந்த பரிசோதனை நடைபெற்றது.  கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உடற்கூராய்வு பரிசோதனை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி நேற்று பிற்பகல் 4.15 மணியளவில் தொடங்கியது. சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த பரிசோதனை மாலை 7.15 மணிக்கு நிறைவடைந்தது. இந்த உடற் கூராய்வை விழுப்புரம் மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி மருத்துவர் ஜூலியட் ஜெயந்தி, சேலம் மருத்துவர் கோகுல்நாத், தடவியல் நிபுணர் சாந்தகுமார் ஆகிய அடங்கிய குழுவினர் மறு  பரிசோதனை செய்தனர். மேலும் இந்த பரிசோதனையானது சிபிசிஐடி எஸ்பி ஜியாஉல் ஹக் மற்றும் ஏடிஎஸ்பி கோமதி முன்னிலையில் நடைபெற்றது.

Kallakurichi: Post mortem of school girl's body: A notice has been issued regarding the post-mortem at the student's house

முன்னதாக, மாணவியின் பெற்றோருக்கு உடற் கூராய்வு தொடர்பாக தகவல் அறிக்கை உயிரிழந்த மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்டது. அதில் மாணவி பெற்றோர் சார்பில் தந்தை இந்த பரிசோதனையில் பங்கு பெறலாம் என்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பெற்றோர் தரப்பில் இந்த மறு உடற்கூராய்வு பரிசோதனையில் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget