Kallakurichi Case: கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: செல்போனை ஒப்படைக்க பெற்றோருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், மாணவி பயன்படுத்திய செல்போனை பெற்றோர் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, 4 முறை சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை பெற்றோர் ஒப்படைக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவி தனியாக செல்போன் வைத்திருக்கவில்லை என்றும், விடுதி வார்டனின் செல்போனில் இருந்தே பேசியதாக தந்தை தெரிவித்துள்ளார். அப்போது, மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்காவிட்டால் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என நீதிமன்றம் தெரிவித்தது.
வழக்கின் பின்னணி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி, மரண சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. பள்ளி கட்டிடம், பொருட்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டன.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் குறுகிய காலத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பிக்கப்படாமல் தண்டனை பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் “வழக்கு குறுகிய காலத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் யாரும் தப்பிக்க விடப்படாமல் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் இடம் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் பள்ளி மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு, அவரது தந்தை ராமலிங்கம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கானது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
காவல்துறை தரப்பு:
இந்நிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செல்போனை ஒப்படைக்குமாறு 4 முறை சம்மன் அனுப்பியும் பெற்றோர் ஒப்படைக்கவில்லை என்றும், ஒப்படைத்தால் மட்டுமே வழக்கின் விசாரணை நிறைவடையும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விசாரணையானது இரண்டு மாத கால அளவில் முடிவடையும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பெற்றோர் தரப்பு:
இதையடுத்து, மாணவி செல்போன் பயன்படுத்தி இருந்தால், உடனடியாக ஒப்படைக்குமாறு நீதிபதி தெரிவித்தார். அதற்கு மாணவி சுயமாக செல்போன் பயன்படுத்தவில்லை என்றும் விடுதி காப்பாளரின் செல்போனவே பயன்படுத்தினார் என்றும் மாணவியின் தந்தை தெரிவித்தார்.
வழக்கு ஒத்திவைப்பு:
#BREAKING | கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்காவிடில் பெற்றோரை விசாரிக்க நேரிடும்; வழக்கு விசாரணை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்https://t.co/wupaoCQKa2 | #kallakurichi #chennaihighcourt pic.twitter.com/e688uoHdzD
— ABP Nadu (@abpnadu) December 15, 2022
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கை வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
Also Read: Lok Sabha: குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!