மேலும் அறிய
Advertisement
யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி மாணவி தாயார் மனு
யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி மாணவி தாயார் மனு.
தங்கள் மீது யூடியூபில்அவதூறு பரப்பி வரும் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வீடியோக்களை நீக்க வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் கள்ளக்குறிச்சியின் தாயார் மனு அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்த நிலையில் இது தற்கொலை அல்ல என மாணவியின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக மாணவியின் தாய் செல்வி இன்று கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமனிடம் மனு ஒன்றை அளித்தார். அப்போது அவர் மகளின் மர்மமான முறையில் உயிரிழந்ததாக முதலில் வழக்கு பதிவு செய்த சின்ன சேலம் காவல் துறையினரும் அதன் பிறகு சிபிசிஐடி போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இது தற்கொலை என சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆரம்பகட்ட விசாரணையில் கூறப்பட்டது. ஆனால் தற்போது உச்ச நீதிமன்றம் இது தற்கொலை தான் என முதற்கட்ட விசாரணையின் போது கூறியதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள நிலையில் தான் காவல்துறை கண்காணிப்பாளர் இடம் மனு அளித்துள்ளதாகவும் ஜனநாயக மாத சங்கத்துடன் இந்த மனு இணைந்து வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் மாணவி மர்ம மரணத்தை தற்கொலை எனக் கூறியும் தன்னையும் தனது கணவர் மற்றும் குழந்தைகள் மீது தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வரும் கே டிவி என்ற youtube சேனலை நடத்தி வரும் கார்த்திக் பிள்ளை என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் எங்களை பற்றி தவறாக போட்டுள்ள அனைத்து வீடியோக்களையும் நீக்க வேண்டுமென காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட காவல் துறை கண்காணிப்பாளர் வழக்கில் என்ன பதிந்துள்ளதோ அதை தான் கூற வேண்டும் தவிர மற்ற கருத்துக்களை யாரும் கூறக்கூடாது என தெரிவித்ததாகவும் இந்த வீடியோக்களை அழிப்பதற்கான நடவடிக்கையும் அவர் தொடர்ந்து அவதூறு கருத்துக்கள் பரப்பாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக ஸ்ரீமதியின் தாயார் செல்வி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion