Karunanidhi Statue in Anna Salai: அண்ணா சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை - முதல்வர் அறிவிப்பு
சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அண்ணாசாலையில் கலைஞருக்கு சிலை வைக்கப்படும் என்று, தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் நீலமேகம் கேள்விக்கு முதல்வர் இவ்வாறு பதில் கூறினார்.
சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.க.தலைவர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் பேரவையில் முதல்வர் அறிவித்தார். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அண்ணாசாலையில் கலைஞருக்கு சிலை வைக்கப்படும் என்று, தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் நீலமேகம் கேள்விக்கு முதல்வர் இவ்வாறு பதில் கூறினார். ஏற்கனவே அண்ணா சாலையில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆருக்கு சிலைகள் இருக்கும் நிலையில், தற்போது கலைஞர் கருணாநிதிக்கும் சிலை அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#BREAKING | சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்https://t.co/wupaoCQKa2 | #TNAssembly | #MKStalin | #TNGovt | #Chennai | #karunanidhi | @mkstalin pic.twitter.com/lWrBkeOrV1
— ABP Nadu (@abpnadu) September 1, 2021
முன்னதாக, ஆகஸ்ட் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருப்படம் திறக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் படத்தை திறந்து வைத்தார்.