(Source: ECI/ABP News/ABP Majha)
TN Rains | 200 வருடங்களில் 4 முறை.. விடாது பெய்யும் மழையும்.. வெதர்மேனின் அப்டேட்டும்!!
இன்னும் 70 மிமீ மழை பெய்தால் நவம்பர் மாதத்தில் சென்னையில் பொழிந்த மழையின் அளவு 1000 மில்லிமீட்டரை கடக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்
வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கிய மழை பிற்பகலில் கனமழையாகவும், அதன் பின்னர் அதிகன மழையாகவும் கொட்டி தீர்த்தது.
இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. 10,000 வீடுகளையும் மழை நீர் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 29ஆம் தேதிவரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று காலை தொடங்கி இப்போதுவரை பல இடங்களில் விடாமல் மழை கொட்டிவருகிறது. இதனால் சாலைகள், குடியுருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதள பக்கங்களில், “டெல்டாவில் இருந்து நகர்ந்த மேகங்கள் சென்னையை நெருங்கியுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டும். பல இடங்களில் நாளை காலை (இன்று) 100 மிமீ மழை பதிவாகும்.
The clouds after slow shift from Delta has reached Chennai after a testing & tiresome journey. It is going to be a very good night for heavy rains in the Chennai city, Chengalpet, Kancheepuram and Tiruvallur. Most stations in KTCC will cross the 100 mm mark by tomorrow morning. pic.twitter.com/iz8k4S6tAq
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 26, 2021
அதேபோல் கடலூர், காரைக்கால், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும். இன்னும் 70 மிமீ மழை பெய்தால் நவம்பர் மாதத்தில் சென்னையில் பொழிந்த மழையின் அளவு 1000 மில்லிமீட்டரை கடக்கும். இதுபோன்று இதுவரை 200 வருடங்களில் 4 முறை மட்டுமே நடந்திருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்