(Source: ECI/ABP News/ABP Majha)
ADMK: பரபரப்பான அரசியல் சூழல்.. ஜூலை 5-ந் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!
வரும் ஜூலை 5ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் ஜூலை 5-ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ”பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 5.7.2023 புதன்கிழமை காலை 9 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தலையைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல்:
அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கி விட்டன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக மற்றும் திமுக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரச்சார வியூகம் உள்ளிட்டவை வகுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: மக்கள் பிரச்சினைகளை எதிர்க்கட்சி என்ற முறையில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பணியை அ.தி.மு.க. செவ்வனே செய்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இதற்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முனைப்புடன் பாடுபட வேண்டும் என தெரிவித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க