Jayalalitha Assets: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புடவைகள், செருப்புகள் உள்ளிட்ட உடைமைகளை ஏலம் விட கர்நாடக நீதிமன்றம் உத்தரவு..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடைமைகளில் ஒரு பகுதியான புடவை, செருப்பு, நகைகள் உள்ளிட்டவற்றை ஏலம் விட கர்நாடக உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடைமைகளில் ஒரு பகுதியான புடவை, செருப்பு, நகைகள் உள்ளிட்டவற்றை ஏலம் விட கர்நாடக சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீது சுமத்தப்பட்ட பின்னர் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் எல்லாம் தமிழ்நாடு மற்றும் வழக்கு நடைபெற்ற கர்நாடக மாநில கருவூலத்தில் கடந்த 26 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது.
அப்படி கருவூலத்தில் வைக்கப்பட்ட பொருட்கள் குறித்து இங்கெ காணலாம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து கைபற்றப் பட்ட புடவைகளின் எண்ணிக்கை மட்டும், 11 ஆயிரத்து 344 ஆகும். அதேபோல், கைப்பற்றப்பட்ட காலணிகளின் எண்ணிக்கை 750, கைக்கடி காரங்களின் எண்ணிக்கை 91, பல்வேறு விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள் மட்டும் 146, அவரது வீட்டில் இருந்து கைபற்றப்பட்ட குளிர் சாதனப் பெட்டி மட்டும் அதாவது ஏசி மட்டும் 44.
இவற்றுடன், 700 கிலோ கிராம் அளவிலான வெள்ளி பொருட்களும், தங்கம், வைரம், மரகதங்கள், ரூபி, முத்துக்கள், ரத்தின கற்கள் ஆகியவையால் செய்யப்பட்ட ஆபரணங்களின் எண்ணிக்கை மட்டும் 468. இதுதவிர ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 514 ரொக்கம் உட்பட 57 வகையான உடமைகள் இரண்டு மாநில கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளன.