Virat Kohli: யுக நாயகனின் பிறந்தநாள் - சேஸிங் மாஸ்டர் கிங் கோலியின் முறியடிக்க முடியாத 8 சாதனைகள்..!
Virat Kohli BDay: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Virat Kohli BDay: விராட் கோலியின் பிறந்தநாளை ஒட்டி, கிரிக்கெட் உலகில் அவர் படைத்துள்ள முறியடிக்க முடியாத சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
யுகத்தின் நாயகன் கோலி:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி, இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது 35வது வயதில் ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிகும் விதமாக தனது 50வது ODI சதத்தை பூர்த்தி செய்தார். 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடி, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால் ஐசிசி கோப்பைக்கான 11 ஆண்டுகால இந்திய ரசிகர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. அதேநேரம், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தார். மேலும், கடைசியாக நடந்த சில தொடர்களில் ரன் சேர்க்க முடியாமல் திணறினார். இந்நிலையில், ஒரு யுகத்தின் நாயகனாக கொண்டாடப்படும் கோலி இதுவரை படைத்துள்ள, முறியடிக்க மிகவும் கடினமான சில சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கோலியின் முறியடிக்க முடியாத சாதனைகள்:
- 1) அதிக ODI சதங்கள் : சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (49) யாரும் முறியடிக்க மாட்டார்கள் என்று பல ஆண்டுகளாக கருதப்பட்டது. இருப்பினும், கோலி கடந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் தனது 50வது சதத்தை பூர்த்தி செய்தார். தற்போதைய சூழலில் இந்த சாதனையை நெருங்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
- இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன்: விராட் கோலி 68 போட்டிகளில் 40 வெற்றிகளுடன் இந்தியாவின் மிக வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக திகழ்கிறார். 147 ஆண்டுகள் பழமையான வரலாற்றில், உலகில் மூன்று கேப்டன்கள் மட்டுமே அதிக கேம்களை வென்றுள்ளனர்.
- வேகமாக 8000, 9000, 10000, 11000, 12000, 13000 ODI ரன்கள்: விராட் கோலி ஒரு சிறந்த ODI பேட்டர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதற்கு சான்றாகவே ஒருநாள் போட்டிகளில் மிக விரைவாக 8000, 90000, 10,000, 11000,12,000 மற்றும் 13000 ODI ரன்களை கடந்த வீரராக உள்ளார். ODI வரலாற்றில் ஐந்து வீரர்கள் மட்டுமே 13000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை தற்போது குறைவதால், கோலியின் இந்த சாதனையை முறியடிக்க ஒரு அதிசயம் தேவைப்படும்.
- அதிக தொடர்நாயகன் விருதுகள்: விராட் கோலி தனது கேரியரில் மொத்தம் 21 முறை தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (20) இரண்டாவது இடத்திலும், ஷாகிப் அல் ஹசன் (17) மூன்றாவது வீரராகவும் உள்ளார். அவர் ஏற்கனவே இரண்டு வடிவங்களில் இருந்து விலகியுள்ளார் மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ODIகளில் இருந்து விடைபெற உள்ளார். வேறு எந்த வீரரும் 12 POTS விருதுகளுக்கு மேல் (ஆர் அஷ்வின்) பெற்றதில்லை.
- ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள்: ஒரே அணிக்கு (இலங்கை) எதிராக 10 ஒருநாள் சதங்கள் அடித்த ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒன்பது சதங்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எட்டு சதங்களும் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒன்பது சதங்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மாவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 சதங்கள் அடித்துள்ளார்.
- ஒருநாள் உலகக் கோப்பையின் ஒரு எடிஷனில் அதிக ரன்கள்: 2023 உலகக் கோப்பை எடிஷனில் கோலி 765 ரன்கள் எடுத்தார். அதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 20 ஆண்டுகால சாதனையை (2003 உலகக் கோப்பையில் 673 ரன்கள்) முறியடித்தார்.
- ஒரு டெஸ்ட் தொடரில் அதிக முறை 600+ ரன்கள் எடுத்த இந்திய வீரர்: மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 600 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த ஐந்து வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். டான் பிராட்மேன் (6) இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பிரையன் லாரா , நீல் ஹார்வி மற்றும் கேரி சோபர்ஸ் ஆகியோர் கோலிக்கு சமமாக மூன்று முறை இந்த சாதனையை படைத்துள்ளனர். ஆஸ்திரேலியா (2014-15), இங்கிலாந்து (2016), இலங்கை (2017) ஆகிய அணிகளுக்கு எதிராக கோலி 600 ரன்களைக் கடந்தார்.
- ODI & T20 உலகக் கோப்பைகளில் தொடர் நாயகன் விருது வென்ற ஒரே வீரர்: ODI மற்றும் T20 உலகக் கோப்பை இரண்டிலும் தொடர் நாயகன் விருதை வென்ற ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே. கோலி டி20 உலகக் கோப்பையில் இரண்டு முறை (2014, 2016) மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருதை வென்றார். உண்மையில், வேறு எந்த வீரரும் ஐசிசி நிகழ்வில் ஒரு முறைக்கு மேல் POTT விருதை வென்றதில்லை.