EPS: "குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்.." ஜெ. நினைவிடத்தில் இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க.வினர் சபதம்..!
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
![EPS: jayalalithaa 6th Year death Anniversary Today Honours in Chennai Marina Edappadi palanisamy honours EPS:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/05/d66f605ab535d25aedadd16fbb3359641670218445748571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அ.தி.மு.க.வினர் அவரது நினைவிடத்திலும், பல்வேறு இடங்களில் உள்ள அவரது சிலைகள் மற்றும் அவரது புகைப்படத்திற்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இபிஎஸ் மரியாதை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆவது நினைவு தினத்தை யொட்டி, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து அமைதி ஊர்வலமாக சென்று, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
"மெகா கூட்டணி அமைப்போம்"
இதை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். அதன்படி, ”மக்களை ஏமாற்ற விட மாட்டோம். பொம்மை முதலமைச்சரே உங்கள் போலி முகத்தை வெளி கட்டுவோம். குடும்ப ஆட்சியின் கொள்ளைக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்று சபதம் ஏற்கிறோம் எனவும், இந்திய சரித்திர வானில் நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக கழகத்தை மாற்றியவர் நம் புரட்சித்தலைவி அம்மா. வருகிறது நாடாளுமன்ற பொதுத் தேர்தல். இத்தேர்தலில் வெற்றி கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட சூளுரைப்போம்” என உறுதிமொழி ஏற்றனர்.
"துரோகிகளை தூள் தூளாக்குவோம்"
மேலும், "தமிழ்நாடு தழைக்க உழைத்திடுவோம் புரட்சித்தலைவரின் பெரும் புகழையும் புரட்சித்தலைவியின் பெரும் புகழையும் எந்நாளும் போற்றிடுவோம் மக்களாட்சியின் மகத்துவத்தையும், மாண்பையும் எடுத்துரைத்த, இதயதெய்வம் அம்மா வழியில், தொடர்ந்து பயணிப்போம். தடம் மாறாது, தடுமாறாது, நாம் கொண்ட கொள்கையில் லட்சியத்தோடு, வீறுநடை போடுவோம்; எதிரிகளை விரட்டியடிப்போம்; துரோகிகளை தூள் தூளாக்குவோம்” என்றும் உறுதிமொழி ஏற்றனர்.
ஜெயலலிதா நினைவு நாள் இன்று
ஜெ. ஜெயலலிதா பிப்ரவரி 24 1948 பிறந்தார். முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் (டிசம்பர் 5 2016) முதலமைச்சராக இருந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை ‘புரட்சித் தலைவி' எனவும் 'அம்மா' எனவும் இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டார். அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது 6-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அ.தி.மு.க.வினர் அவரது நினைவிடத்திலும், பல்வேறு இடங்களில் உள்ள அவரது சிலைகள் மற்றும் அவரது புகைப்படத்திற்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மலர்களால் அலங்கரிப்பு
ஜெயலலிதாவின் 6-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் மலர்களால் அலகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களில் ஜெயலலிதா படத்தை வைத்து மலர்களால் அலகரித்து அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)