Jallikattu: ஜல்லிக்கட்டு போட்டியை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை - விளையாட்டு அமைச்சகம்
ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயத்தை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
![Jallikattu: ஜல்லிக்கட்டு போட்டியை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை - விளையாட்டு அமைச்சகம் Jallikattu Rekla Race Has Not Approved by Sports Ministry Says Anurag Singh Thakur Jallikattu: ஜல்லிக்கட்டு போட்டியை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை - விளையாட்டு அமைச்சகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/28/95934b0ce68347ab7b98606dd4a6a65c1680002213453333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு போட்டி உள்ளது. பாரம்பரிய விளையாட்டான இந்த போட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போட்டிகளில் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயத்தை விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மக்களைவையில் கேள்வி நேரத்தின் போது, நாட்டில் மாட்டுவண்டி பந்தயம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா என மக்களவை உறுப்பினர் ரவனீத் சிங் பிட்டு கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர்,” கிராமப்புற மற்றும் பழங்குடியிர்களை ஊக்குவிக்கும் “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் மாட்டுவண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியை மத்திய அரசு இத்திட்டத்தின் கீழோ அல்லது வேறு எந்த அமைச்சகத்தின் கீழோ அங்கீகரிக்கவில்லை. மேலும், மாட்டுவண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் அரசிடம் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால் இரு அவைகளும் 11-வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது, ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகளின் கடும் அமளியாலும் மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
மேலும் வாசிக்க..
முடி திருத்தும் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக்க வேண்டும் - கம்பம் ராஜன்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)