மேலும் அறிய

நேரில் ஆஜராகிறார் ரஜினி? தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணையக் குழு பேட்டி!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின் 28வது கட்ட விசாரணை கடந்த 5-ந்தேதி தொடங்கி கடற்கரை சாலையில் உள்ள  அலுவலகத்தில் இன்று நிறைவு பெற்றது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின் 28வது கட்ட விசாரணை கடந்த 5-ந்தேதி கடற்கரை சாலையில் உள்ள  ஒரு நபர் முகாம் அலுவலகத்தில் தொடங்கி இன்று(15-ந்தேதி) நிறைவு பெற்றது. இந்த விசாரணையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

நேரில் ஆஜராகிறார் ரஜினி? தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணையக் குழு பேட்டி!
இதுகுறித்து ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 28-வது கட்ட விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக துப்பாக்கிச்சூடு அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 102 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 95 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். மொத்தமாக 28 கட்ட விசாரணையையும் சேர்த்து இதுவரை 1153 பேருக்கு ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டதில் 813 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இதில் 718 பேர் மனுதாரர் தரப்பு சாட்சியம். 94 பேர் காவல்துறை சார்பில் சாட்சியம் அளித்தவர்கள். ஒருவரை ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பி விசாரித்து உள்ளோம்.

நேரில் ஆஜராகிறார் ரஜினி? தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணையக் குழு பேட்டி!
இதுவரை மொத்தம் 1150 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 1127 ஆவணங்கள் மனுதாரர் தரப்பிலிருந்தும், காவல்துறையில் சார்பில் 23 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இன்னமும் 300 நபர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.  விசாரணைக்கு ரஜினி நேரில் ஆஜராவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பப்படுமா என கேள்வி எழுப்பியதற்கு, ஆணையம் தரப்பிலிருந்து விளக்கம் தேவைப்படும் நபர்களுக்கு மட்டுமே சம்மன் அனுப்பப்படும். எனவே முன்னாள் முதல்வருக்கு சம்மன் அனுப்புவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக அரசிடம் ஒரு நபர் ஆணையம் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்கு ஆணையம் தரப்பிலிருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இடைக்கால அறிக்கையில் பரிந்துரைத்த கோரிக்கைகளை அவர் ஏற்று அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வேலையும், நிவாரணத்தையும் வழங்கியுள்ளார். 

நேரில் ஆஜராகிறார் ரஜினி? தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணையக் குழு பேட்டி!
 
ஆணையம் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பரத்வாஜ் என்பவர் சிறைக்கு சென்ற பிறகே இறந்தார் என்பது தெரிய வந்தது. எனவே பரத்வாஜின் குடும்பத்தினருக்கு மட்டும் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விசாரணையை முடிக்க கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இல்லையெனில் இதற்குள் விசாரணை முழுமையாக நடைபெற்று முழு அறிக்கையும் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கும். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆணையத்தின் முன்பு ஆஜராகும் காவலர்கள் இழப்பீடு கேட்டு அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். அதில் தகுதியானவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இதுவரை 95 பேர் அவர்கள் தரப்பிலிருந்து இழப்பீடு கேட்டு உள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த மனுக்களில் கூறப்பட்டுள்ள தகவலின் உண்மைத்தன்மை அடிப்படையில் தகுதியானவர்களுக்கு ஆணையம் தரப்பிலிருந்து பாகுபாடின்றி நிவாரணங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தடுத்த கட்ட விசாரணைக்கு ஸ்டெர்லைட் குடியிருப்பில் தங்கியிருந்தவர்கள், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களை உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள், தடய அறிவியல் காவலர்கள் மற்றும் அன்றைய தினம் பணியிலிருந்த காவல் கண்காணிப்பாளர், தென் மண்டல காவல்துறை தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர். ஒரு நபர் ஆணையத்தின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற உள்ளது.  இந்த விசாரணையில்  வழக்கறிஞர் ஹென்றி திபேன் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்காக அழைக்கப்படுவர் என்றார். நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவது குறித்து பின்னர் முடிவு செய்யப்பட்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget