Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 8ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கிவைக்கவுள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டம்
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தை மாதத்தின் தொடக்கத்தில் நான்கு நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது, இந்த பண்டிகையானது சூரியன், இயற்கை, மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்து புதுப் பானையில் பொங்கல் வைத்து மக்கள் மகிழ்வார்கள். எனவே தமிழர்களின் திருநாளையொட்டி தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும். கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டில் பொங்கல் பரிசு தொகுப்பான வேட்டி, சேலை, பச்சரிசி, சக்கரையோடு ரொக்கப்பணம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
பொங்கல் பரிசு- ரொக்கப்பணம் இருக்கா இல்லையா.?
கடந்த 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது நிதி நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவித்த தமிழக அரசு, ரொக்கப்பணம் ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை. எனவே இந்தாண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசின் சார்பில் மக்களை கவரும் வகையில் பொங்கல் பரிசாக ரொக்கப்பணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ப அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் ரூ.5000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனவரி 8ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்
ஆனால் ரொக்க பணம் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசின் தரப்பில் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்க பணம் வழங்குவது தொடர்பாக இன்றோ அல்லது நாளையோ முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக தனி அரசாணையும் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறதுஇந்த நிலையில் தான் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வருகிற 8ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் தற்போது அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவிப்பை பொறுத்து வருகிற 4 அல்லது 5ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.





















