மேலும் அறிய

Puzhal Lake: புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் திறப்பு.. போக்குவரத்துக்கு அனுமதியில்லை..

புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Puzhal Lake: புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் திறப்பு.. போக்குவரத்துக்கு அனுமதியில்லை..

புழல் ஏரியின் உயரம் 21.20 அடியாகும். வியாழக்கிழமை 20.31 அடியை எட்டியது. புழல் ஏரிக்கு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரி நிரம்ப இன்னும் ஒன்றரை அடி நீர் மட்டுமே தேவை என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வினாடிக்கு 400 கனஅடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. புழல் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரிநீர் நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், மஞ்சம்பாக்கம், மணலி, எண்ணூர் வழியாக கடலுக்கு செல்கிறது. இதனால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மஞ்சம்பாக்கம், வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்ந்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் சென்னை மாவட்டத்தில் பாய்கின்ற அடையாறு ஆற்றில் கலப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமாக உள்ளது.

செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 21.23 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்பொழுது தண்ணீரின் அளவு 2.916 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது 609 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் அளவு 3285 கன அடியாக உள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

அடுத்த சில நாட்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஏரிகளில் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீர் வரத்திற்கு ஏற்றார் போல வெளியேற்றப்படும் நீரின் அளவு மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explain: சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

”தாய் மதத்துக்கு திரும்பு”கொந்தளிக்கும் பாஜகவினர்!AR ரஹ்மான் சர்ச்சை பின்னணி?
19 பீர் பாட்டில்கள்... நண்பர்களின் விபரீத போட்டி! பறிபோன உயிர்கள்
வீடியோ எடுத்த பெண் மீது CASE! முந்தைய இரவு நடந்தது என்ன? தீபக்கின் நண்பர் பகீர்!
PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explain: சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
சட்டசபைக்கு வந்த ஆளுநர் ரவி.. சபாநாயகர் கொடுத்த புத்தகம்.! என்ன தெரியுமா.?
சட்டசபைக்கு வந்த ஆளுநர் ரவி.. சபாநாயகர் கொடுத்த புத்தகம்.! என்ன தெரியுமா.?
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Embed widget