மேலும் அறிய

TN Weather Update: வதைக்கும் வெயில்.. 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் வெப்பநிலை.. மே 1-ஆம் தேதி வரை வெப்ப அலை..

அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் என்றும் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் மே 1 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மே 2 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மே 3 ஆம் தேதி, தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 

27.04.2024 முதல் 01.05.2024 வரை:

தமிழக உள்  மாவட்டங்களில்  அடுத்த ஐந்து  தினங்களில்  அதிகபட்ச   வெப்பநிலை 2°  செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழக உள்  மாவட்டங்களில்  அடுத்த ஐந்து  தினங்களில்  அதிகபட்ச   வெப்பநிலை 3°-5°  செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39°–42° செல்சியஸ், இதர  தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°–39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்

27.04.2024 முதல் 01.05.2024 வரை:

காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும்  இருக்கக்கூடும். 

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

இன்று முதல் மே 1 ஆம் தேதி வரை, அடுத்த ஐந்து  தினங்களில் வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், இதர  தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்    அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நேற்றைய தினம், அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருந்தது.  அதிகபட்சமாக 9  இடங்களில்   40.0° செ- க்கு மேல்  பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை  ஈரோட்டில் 42.0° செல்சியஸ்,  திருப்பத்தூரில் 41.6° செல்சியஸ், சேலத்தில் 41.5° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.0° செல்சியஸ், தர்மபுரியில்  41.0° செல்சியஸ்,  திருத்தணியில் 40.4°, வேலூரில் 40.3°, திருச்சியில் 40.1° செல்சியஸ் மற்றும் நாமக்கல்லில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.  சென்னை மீனம்பாக்கத்தில் 36.7° செல்சியஸ்  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.4° செல்சியஸ்   பதிவாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!
கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!
இளம் பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம்; தொழிலாளி தலை துண்டித்து படுகொலை - நிலக்கோட்டை அருகே பயங்கரம்
இளம் பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம்; தொழிலாளி தலை துண்டித்து படுகொலை - நிலக்கோட்டை அருகே பயங்கரம்
Fahadh Faasil:
Fahadh Faasil: "புஷ்பா படத்தால ஒரு பிரயோஜனமும் இல்ல" பகத் ஃபாசில் ஓபன் டாக்!
Delhi Liquor Policy Case: ரூ.100 கோடி கேட்ட கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்: ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா?
ரூ.100 கோடி கேட்ட கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்: ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Modi casts vote | ஓட்டு போட்ட கையோடு குழந்தையுடன் விளையாடிய மோடிSavukku Shankar Arrest | ”சவுக்கு உயிருக்கு ஆபத்து சிறையில் இப்படி நடக்குது” வழக்கறிஞர் பரபர பேட்டிKS Alagiri | காங்., ஜெயக்குமார் மரணம்KPK Jayakumar Death | காங். ஜெயக்குமார் மர்ம மரணம்வெளியான அதிர்ச்சி வீடியோ! திடீர் திருப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!
கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!
இளம் பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம்; தொழிலாளி தலை துண்டித்து படுகொலை - நிலக்கோட்டை அருகே பயங்கரம்
இளம் பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம்; தொழிலாளி தலை துண்டித்து படுகொலை - நிலக்கோட்டை அருகே பயங்கரம்
Fahadh Faasil:
Fahadh Faasil: "புஷ்பா படத்தால ஒரு பிரயோஜனமும் இல்ல" பகத் ஃபாசில் ஓபன் டாக்!
Delhi Liquor Policy Case: ரூ.100 கோடி கேட்ட கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்: ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா?
ரூ.100 கோடி கேட்ட கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்: ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா?
திருக்குறள் சொல்லுங்க ஃப்ரீயா கரும்பு ஜூஸ் குடிங்க! தள்ளுவண்டி கடையில் தமிழ் வளர்க்கும் இளைஞர்!
திருக்குறள் சொல்லுங்க ஃப்ரீயா கரும்பு ஜூஸ் குடிங்க! தள்ளுவண்டி கடையில் தமிழ் வளர்க்கும் இளைஞர்!
சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!
சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய கட்டுப்பாடு - மாநகராட்சி அறிவுறுத்தல்!
TN Headlines: கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ- பாஸ்! சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார்- இதுவரை இன்று நடந்தது?
TN Headlines: கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ- பாஸ்! சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார்- இதுவரை இன்று நடந்தது?
TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை குறையும் - மிதமான மழைக்கு வாய்ப்பு!
TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை குறையும் - மிதமான மழைக்கு வாய்ப்பு!
Embed widget