மேலும் அறிய

2ம் நாளாக காவல்துறை விசாரணை வளையத்தில் ஈஷா யோகா மையம்; பின்னணி என்ன?

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 2ஆம் நாளாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

கோயம்புத்தூரில் ஈஷா என்னும் பிரபல யோகா மையம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமானோர் சென்று தங்கி யோகா, ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டவரும் அதிகம் வருவதுண்டு. ஈஷா யோகா மையம் மீது அடிக்கடி சர்ச்சைகள் எழும் நிலையில், கோவை வடவள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இரு மகள்களையும் மீட்க வேண்டும்

அந்த வழக்கில் தன்னுடைய மகள்களான கீதா மற்றும் லதா இருவரையும் மூளைச்சலவை செய்து ஈஷா யோகா மையத்தில் தங்க வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த ஆட்கொணர்வு மனுவுடன் சேர்த்து, ஈஷா யோகா மையத்தின் மீதான பல குற்றச்சாட்டுக்களையும் அவர் முன்வைத்திருந்தார். இந்த வழக்கை செப்.30 அன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அவரின் இரண்டு மகள்களிடமும் நேரில் விசாரணை நடத்திய பிறகு, இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த வழக்கில் விரிவான அறிக்கையை வரும் அக்டோபர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த விசாரணையில் ஈஷா யோகா மையத்தின் மீது உள்ள மற்ற வழக்குகள் குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

எஸ்பி, டிஎஸ்பி தலைமையில் விசாரணை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று (அக்.1) விசாரணை நடத்தினர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், டி.எஸ்.பி. சிவக்குமார், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தினர்.

பேராசிரியர் காமராஜரின் மகள்கள் மட்டுமின்றி அங்குள்ள மற்றவர்களிடமும் விசாரணை நடத்தினர். காலை 10.45 மணி வாக்கில் தொடங்கிய விசாரணை இரவு 7.30 வரை நீடித்தது.

என்ன விசாரணை?

ஈஷாவில் இதுவரை தங்கி உள்ளவர்கள் எத்தனை பேர், எவ்வளவு பெண்கள் துறவறம் பூண்டுள்ளனர், வெளிநாட்டினர் எத்தனை பேர் உரிய ஆவணத்துடன் தங்கியுள்ளனர், ஈஷா வந்து மாயமானவர்கள் யாராவது உள்ளனரா என்பன குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து 2ஆவது நாளாக இன்றும் (அக்.2) விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துறவிகள், தன்னார்வலர்கள், ஈஷா ஊழியர்கள் என 700-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது.

8 ஆண்டுகளாக வழக்கு

கீதா, லதா இருவரும் பிரம்மச்சரியம் பெற்று மாமயூ, மாமதி என்ற பெயரில் ஈஷாவில் தங்கியுள்ளனர். பேராசிரியர் காமராஜர் தனது மகள்களை மீட்டுத்தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Breaking News LIVE: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. பதைபதைக்கும் மக்கள்..
Breaking News LIVE: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. பதைபதைக்கும் மக்கள்..
2ம் நாளாக காவல்துறை விசாரணை வளையத்தில் ஈஷா யோகா மையம்; பின்னணி என்ன?
2ம் நாளாக காவல்துறை விசாரணை வளையத்தில் ஈஷா யோகா மையம்; பின்னணி என்ன?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh Hospitalized | கடும் வயிற்றுவலி..அட்மிட்டான அன்பில் மகேஷ்!ஓடி வந்த உதயநிதிAnbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?
Breaking News LIVE: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. பதைபதைக்கும் மக்கள்..
Breaking News LIVE: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. பதைபதைக்கும் மக்கள்..
2ம் நாளாக காவல்துறை விசாரணை வளையத்தில் ஈஷா யோகா மையம்; பின்னணி என்ன?
2ம் நாளாக காவல்துறை விசாரணை வளையத்தில் ஈஷா யோகா மையம்; பின்னணி என்ன?
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
”அதிமுக, விஜய் பங்கேற்கவில்லை” திருமாவின் மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பாளர்கள் யார் யார்..?
Madurai Airport : துவங்கியது மதுரை விமான நிலையம் 24 மணிநேர சேவை.. தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
Madurai Airport : துவங்கியது மதுரை விமான நிலையம் 24 மணிநேர சேவை.. தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
Isha: நீதிமன்ற உத்தரவு! ஈஷா யோகா மையத்தில் கோவை எஸ்.பி., அதிகாரிகள் நேரில் விசாரணை!
Isha: நீதிமன்ற உத்தரவு! ஈஷா யோகா மையத்தில் கோவை எஸ்.பி., அதிகாரிகள் நேரில் விசாரணை!
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
Embed widget