மேலும் அறிய
Advertisement
5ஜி அலைகற்றையால் தான் கொரோனா பரவலா? - மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
மனுதாரரின் ஆய்வு மிகப் பெரியது, நீதிபதிகள் இதுபோன்ற ஆய்வுகள் குறித்த நிபுணர்கள் இல்லை - நீதிபதிகள் கருத்து
நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜசேகர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "பல நாடுகளில் 2019 ஆம் ஆண்டு முதலே 5ஜி சேவைக்கான பரிசோதனைகள் நடந்து வருகிறது. 5ஜி அலைக்கற்றை டவர் இல்லாத பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு இல்லை. இதுதொடர்பாக பல்வேறு நாடுகளில் ஆய்வு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்த 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி சேவைகளால் தான் உலகில் சுற்றுச்சூழல் மாறுபாடு அதிகரித்தது. மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டன. 5ஜி அலைகற்றையால் தான் கொரோனா பரவல் ஏற்படுகிறது. எனவே, இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முறையாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறும், உறுதிப்படுத்துமாறும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 5ஜி தொழில்நுட்பம் இல்லாத நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று குறைவாகவே காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் ஆய்வு மிகப் பெரியது, நீதிபதிகள் இதுபோன்ற ஆய்வுகள் குறித்த நிபுணர்கள் இல்லை. எனவே, இதுபோன்ற ஆய்வு குறித்து ICMR, IIT போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அனுமதி அளித்துள்ளதா என கேள்வி எழுப்பினர். மேலும் இதுபோன்ற வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்க முடியாது என தெரிவித்தனர். இதை தொடர்ந்து மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
*சாத்தூர் அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க கோரிய வழக்கு - டிசம்பர் 6ஆம் தேதி இறுதி தீர்ப்பு
விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறையை சேர்ந்த சிவ பாலசுப்ரமணியின், கிருஷ்ணவேணி, உள்ளிட்ட 6 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில்," தங்களின் உறவினர்களாகிய ஆறு பேரும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள சிப்பிபாறையில் உள்ள ராஜம்மாள் பயர் ஒர்க்சில் நடந்த வெடி விபத்தில் சிக்கினர். இதில் படுகாயமுற்றவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதில், அரசு நிவாரணமாக 10 லட்ச ரூபாய் மற்றும் அரசு வேலை அறிவித்தது. மேலும் தற்காலிக நிவாரணமாக 1 லட்சம் ரூபாய் கொடுப்பதாக அரசு அறிவித்தது, ஆனால் மத்திய மாநில அரசுகள் இதுவரை எவ்வித நிவாரணமும் அளிக்கவில்லை. தற்பொழுது வருவாய் இன்றி எங்களது குடும்பங்கள் தவித்து வருகிறது. எனவே எங்கள் பொருளாதாரத்தை காத்திட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, மற்றும் தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது, தமிழக அரசு தரப்பில், சாத்தூர் தீ விபத்தில் இறந்தவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீதிபதிகள் வழக்கினை டிசம்பர் 6ஆம் தேதி இறுதி உத்தரவிற்காக ஒத்திவைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion