மேலும் அறிய

DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?

மாநிலத்தின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பு சாசனத்தின் துணையோடு அதனை எதிர்த்து போராடுவோம் என்று சட்டப்பேரவையிலேயே முழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் டிஜிபி நியமனத்தில் மத்திய அரசின் நடைமுறையை அப்படியே பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்போகிறாரா ? அல்லது அதனை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி களமாடப்போகிறாரா ?

தற்போதைய டிஜிபியாக இருக்கும் திரிபாதி, இந்த மாத இறுதியில் ஓய்வு பெற உள்ள நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், டிஜிபி நியமனத்தில் மாநில சுயாட்சி உரிமை மீறப்படுகிறதா என்ற கேள்வியும் அதோடு சேர்ந்தே எழுந்துள்ளது.

DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?
தற்போதைய டிஜிபி திரிபாதி ஐபிஎஸ்

சட்டம்  ஒழுங்கு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளபோது, அதனை கண்காணிக்கும் தலைமை பொறுப்பான சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குநர் பதவியில் மாநில அரசு ஒருவரை தேர்ந்தெடுத்து நியமிக்கமுடியாத சூழல் நிலவுகிறது.  ஒரு மாநிலத்தின் தலைமைச்செயலாளர், உள்துறை செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளில் தகுதி வாய்ந்த அதிகாரிகளை தேர்ந்தெடுத்து நியமிக்கும் மாநில அரசால், காவல்துறை டிஜிபி பதவிக்கு  மட்டும் தகுதியான நபரை தேர்வு செய்து நியமிக்க முடியாதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?

காவல்துறை டிஜிபி பதவியை பொறுத்தவரை டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் பட்டியலை UPSC எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணயத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பி வைத்து, அவர்கள் தேர்வு செய்து கொடுக்கும் 3 நபர்களில் ஒருவரைதான் தங்கள் மாநில டிஜிபியாக ஒரு அரசு நியமிக்க முடியும் என்ற நடைமுறை தொடர்கிறது. இந்த நடைமுறை என்பது முற்றிலும் மாநில சுயாட்சி தத்துவத்திற்கும், மாநில உரிமைக்கு எதிரானது என்ற குரல் இப்போது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முதலமைச்சரால், அமைச்சரால் டிஜிபி நியமனம் தொடர்பாக டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க முடியாது. மாறாக, தற்போதைய டிஜிபி மற்றும் தலைமைச்செயலாளர் மட்டுமே அந்த கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் மாநில டிஜிபி குறித்த பரிந்துரைகளை அளிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது.

DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

அதேபோல், டிஜிபியாக தேர்வு செய்யப்படும் நபர், பணி ஓய்வு பெற குறைந்தப்பட்சம் ஆறு மாதங்கள் இருக்க வேண்டும் என்பது எதன் அடிப்படையில் ? தமிழ்நாட்டிற்கு என்று தனியாக சிறப்பு காவல்துறை சட்டம் இருக்கும்போது, அதன்படி 5 பேரை தேர்வு செய்து கொடுக்காமல், 3 பேரை மட்டுமே தேர்வு செய்து கொடுப்பது எதனால் ? என்ற கேள்விகளுக்கான விடைகள் தெரியாமல் இருக்கும்போது, டிஜிபியாக நியமிக்கப்படும் நபர் 2 வருடங்கள் பதவியில் நீடிப்பார். அந்த காலத்தில் அவரை மாற்றவோ, பதவியில் இருந்து நீக்கவோ அவ்வளவு எளிதாக மாநில அரசால் முடியாது. ஆனால், தலைமைச்செயலாளரையோ, உள்துறை செயலாளரையோ உடனடியாக மாற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது.

DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?
தமிழ்நாடு காவல்துறை தலைமையகம்

இப்படி மத்திய அரசு அதிகாரிகள் தேர்வு செய்து கொடுக்கும் டிஜிபி, மாநில அரசின் அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைத்து எப்படி செயல்படுவார் என்ற கேள்வியும் கூடுதலாக எழாமல் இல்லை. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவு இருப்பதனால், இது குறித்த விவாதம் என்பது பெரிய அளவில் எழாமல், காவல்துறை வட்டாரத்தில் மட்டுமே விவாத பொருளாகி, அத்தோடு அடங்கிவிடுகிறது. அதேபோல், இதுவரை இந்த நடைமுறையை எதிர்த்து எந்த மாநில அரசும் வழக்கு தொடராத நிலையில்,  மாநில சுயாட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு இதனை எதிர்க்குமா என்ற ஆவல் பலரிடையே ஏற்பட்டிருக்கிறது.DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?

 

கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் டிஜிபியாக டிகே.ராஜேந்திரனை நியமிக்கக் கூடாது என்று கடுமையான எதிர்ப்பு இருந்த நிலையில், அவருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஜார்ஜ்க்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்ட போதும், நள்ளிரவில் டிகே ராஜேந்திரன் தான் தமிழ்நாடு டிஜிபி என அறிவிப்பாணை வெளியானது.

DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?
டிகே ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் ஐபிஎஸ்

அதேபோல, தற்போதைய டிஜிபியாக இருக்கும் திரிபாதி நியமனத்தில் கூட அப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு விரும்பியது ஜாபர் சேட்டைதான். ஆனால், அன்றைய தலைமைச் செயலாளராக, டெல்லி சென்ற கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு  விரும்பும் நபர் குறித்து சரியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால்தான் திரிபாதி டிஜிபியாக நியமிக்கப்பட்டார் என்றும் அப்போது காக்கிகள் வட்டாரத்தில் கிசிகிசுக்கப்பட்டது.

DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?
ஜாபர் சேட்

புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்தில் அமைச்சர் இல்லாமல் அதிகாரிகளை வைத்து ஆலோசனை செய்வதை ஏற்க முடியாது என்று சொன்ன பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அந்த கூட்டத்தையே புறக்கணித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் மக்கள் பிரதிநிதியும் இருக்கும்போது, பள்ளிக் கல்வித்துறைக்கு என தனியாக அமைச்சரும் இருக்கும்போது, அதிகாரிகளை மட்டுமே வைத்து கூட்டம் நடத்துவது என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணானது, மாநில சுயாட்சிக்கு எதிரானது என பேட்டிக் கொடுத்தார். இப்போது இந்த டிஜிபி நியமனத்தில் தமிழ்நாடு அரசு என்ன நிலைபாடு எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஷ்

மாநில சுயாட்சி, ஒன்றிய அரசு, மாநிலங்களின் துணையோடு மட்டுமே வலிமையான ஒன்றிய அரசை உருவாக்க முடியும் என்றெல்லாம், தொடர்ந்து முழங்கியும், பல்வேறு மாநில முதல்வர்களுக்கு கடிதங்கள் எழுதியும் வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த டிஜிபி நியமனத்தில் என்ன மாதிரியான முடிவை எடுக்கப்போகிறார் என்பதும், மாநில அரசின் உரிமைகளுக்கு ஆபத்து வந்தால், அரசியலமைப்பு சட்டத்தின் துணையோடு அதனை எதிர்த்து போராடுவோம் என்று சட்டப்பேரவையிலேயே அறிவித்த அவர், மத்திய அரசின் டிஜிபி நியமன நடைமுறையை எதிர்த்தும், உச்சநீதிமன்ற உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்றும் சட்டப்போராட்டத்தை முன்னெடுப்பாரா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இது குறித்து தமிழ்நாடு முன்னாள் சட்டம் ஒழுங்கு டிஜிபி நட்ராஜ் ஐபிஎஸ்-சிடம் கேட்டபோது :-DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?

டிஜிபி நியமனம் என்பது உச்சநீதிமன்ற வழிகாட்டலின் அடிப்படையில், தீர்ப்பின்படி நடைபெறுகிறது. உச்சநீதிமன்றம் சொன்னால் அது கட்டளை. இதில் மாநில உரிமை மீறப்படுவதாக சொல்வதில் எல்லாம் உண்மை இல்லை. மத்திய அரசுதான் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்து மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். இந்த பணிகள் என்பது அகில இந்திய அளவில் வேலை செய்வது. முதலில் இதனை புரிந்துக்கொள்ள வேண்டும். இப்படி பேசுவதெல்லாம் குறுகிய மனபான்மையே தவிர வேறொன்றும் இல்லை. டிஜிபியை தேர்வு செய்யும் இந்த நடைமுறை நூற்றுக்கு நூறு சதவீதம் சரியே. மத்திய அரசின் நியமனங்களான CRPF, BSF போன்ற துறைகளின் தலைமை இயக்குநர் பொறுப்புகளில் கூட இந்த நடைமுறையைதான் கடைபிடிக்கின்றனர் என்றார்.

அதேபோல், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பாலசந்தரிடம் கேட்டபோது :


DGP Appointment Update: : ’டிஜிபி நியமனம்’ மீறப்படுகிறதா மாநில சுயாட்சி..?

டிஜிபி நியமனத்தில் மாநில சுயாட்சி மீறப்படுவதாக கூறப்படுவது ஓரளவிற்கு உண்மைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால், ஆட்சியில் உள்ளவர்களின் உரிமையை மீறும் செயலாக இதை எடுத்துக்கொள்ளலாம். சிபிஐ-யை பொறுத்தவரைக்கும் இதில் மாற்றம் செஞ்சாங்க, சிபிஐ இயக்குநர் நியமனத்தின்போது பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கூடி தேர்வு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது.  காவல்துறையில் டிஜிபி நியமனத்தில் இந்த முறை பின்பற்றப்பட காரணம், யாரை பயன்படுத்தினால் மிகப்பெரிய கேடு மக்களுக்கு விளையும் என்று பார்த்தால், அது காவல்துறையைதான். அதனால், அந்த காவல்துறையின் தலைமை இயக்குநரை தேர்வு செய்வது செய்வதில் மிகுந்த கவனம் தேவை என்பதால் இதுபோன்ற நடைமுறை இருக்கிறது. அதேபோல், இந்த மாதிரியான பதவிகளுக்கான தேர்வில் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக இருந்தால்தான் அது சரியாக இருக்கும் என்றார்.

 

 

 

தலைப்பு செய்திகள்

ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget