மேலும் அறிய
Advertisement
IPS Transfer: 14 அதிகாரிகளுக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு..! தமிழ்நாடு முழுவதும் 20 அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
IPS Transfer: இருபது ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 14 ஏ.எஸ்.பி.க்களுக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
- வேலூர் போலீஸ் தேர்வு பள்ளி ஏ.எஸ்.பி.யாக இருந்த அசோக்குமார் எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட் (வேலூர்) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
- செங்கல்பட்டு சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பி. பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை, ரயில்வே எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அரியலூர் சைபர் கிரைம் ஏ.எஸ்.பி. ரவிசேகரன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை, தலைமை அலுவலக ஏ.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருச்சி, தலைமை அலுவலக ஏ.எஸ்.பி. ஆசைத்தம்பி பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருப்பூர் நகர துணை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ராணிப்பேட்டை சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பி. முத்துக்கருப்பன் எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு பழனி தமிழ்நாடு சிறப்பு காவல் 16வது பட்டாலியன் கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஈரோடு சைபர்கிரைம் பிரிவு கூடுதல் துணை ஆணையர் ஜானகிராம் எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஆவடி ரெஜிமெண்ட் மைய கமாண்டன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நாமக்கல் சைபர் கிரைம் ஏ.எஸ்.பி. சந்திரமௌலி பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை, போலீஸ் பயிற்சி கல்லூரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பழனி தமிழ்நாடு சிறப்பு பிரிவு ஏ.எஸ்.பி. மங்களேஸ்வரனுக்கு எஸ்.பி.பதவி உயர்வு அளிக்கப்பட்டு மதுரை நகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- வேலூர் சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பி. குணசேகரன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு சேலம் நகர துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தருமபுரி ஏ.எஸ்.பி. அண்ணாமலை எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை என்.ஐ.பி. சி.ஐ.டி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருநெல்வேலி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏ.எஸ்.பி, மாரிராஜன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு தூத்துக்குடி பேரூரணி போலீஸ் தேர்வு பள்ளி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏ.எஸ்.பி. மோகன்நவாஸ் எஸ்.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை, சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஆவடி, சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் கெங்கைராஜ் பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை, தமிழ்நாடு போலீஸ் அகாடமி துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மதுரை நகர துணை ஆணையர் கவுதம் கோயல் ஐ.பி.எஸ். சேலம் வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- வேலூர் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 15வது பட்டாலியன் கமாண்டன்ட் சந்திரசேகரன் சென்னை கடல்சார்ந்த அமலாக்கத்துறை பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை, புலனாய்வு பிரிவு -2 துணை ஆணையர் சக்திவேல் கொளத்தூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை, நிர்வாக துணை ஆணையர் ராமமூர்த்தி சென்னை, புலனாய்வு பிரிவு – 2 துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பழனி, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் கமாண்டன்ட் அய்யாசாமி, பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 13வது பட்டாலியன் கமாண்டன்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion