மேலும் அறிய
IPS Promotion: 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு: தமிழ்நாடு அரசு உத்தரவு
4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎஸ் பதவி உயர்வு
தமிழ்நாடு அரசு அவ்வப்போது ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மாற்றம் செய்து அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு புதிய ஐபிஎஸ் பதவி உயர்வு உத்தரவை அறிவித்துள்ளது. அதன்படி ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வை அறிவித்துள்ளது.
அதன்படி ஏடிஜிபியாக இருந்து வரும் ரவி ஐபிஎஸ், அம்ரேஷ் புஜாரி ஐபிஎஸ், ஜெயந்த முரளி ஐபிஎஸ் மற்றும் கருணாசாகர் ஐபிஎஸ் ஆகியோர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















