மேலும் அறிய

கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு எல்லையில் தடுப்பூசி - மறுப்பு தெரிவித்தால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

’’கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்துவேன் என இளைஞர் ஒருவர் தொடர்ந்து கூறி வந்ததால் அவரை கர்நாடகாவுக்கு அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்’’

கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் வந்த இருவருக்கு ஓமிக்ரான் வைரஸ் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவர்களும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். ஓமிக்ரான் வைரஸ் நோய் பரவலை தடுக்க கர்நாடக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸ் நோய்த்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மாநில எல்லைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு வரும் முக்கிய தரைவழி பாதையான ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி அருகே நேற்று முதல் வருவாய்த்துறை காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மற்றும் பயணிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு எல்லையில் தடுப்பூசி - மறுப்பு தெரிவித்தால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

அந்த வகையில் இன்று 2-வது நாளாக ஜுஜுவாடி பகுதியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நுழையும் வாகனங்களை தடுத்து நிறுத்தி நோய்த்தடுப்பு கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டும், வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வாகனங்களில் வருவோர் தடுப்பூசி போட்டு கொண்டார்களா என்பதை விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளையும் அதிகாரிகள் சரி பார்த்து வருகின்றனர்.

குஜராத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் குஜராத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது

கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு எல்லையில் தடுப்பூசி - மறுப்பு தெரிவித்தால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அல்லது முதல் தவணை மட்டுமே செலுத்தி கொண்டவர்களுக்கு மாநில எல்லையில் தடுப்பூசி செலுத்தும் மையம் அமைக்கப்பட்டு அதில் ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழுவினர் கோவிஷில்டு கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர் நோக்கி தமிழகத்திற்குள் நுழைந்த ஒரு வாலிபர் இதுவரை எவ்வித தடுப்பூசியும் செலுத்தாததால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்துவேன் என தொடர்ந்து கூறி வந்ததால் அவரை அதிகாரிகள் திரும்பவும் கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தற்போது, 100 வெண்டிலேட்டர்கள் மற்றும் 13 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் நிமிடத்திற்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது .கிருஷ்ணகிரி மருத்துவமனையில் தற்போது 100 படுக்கைகள் மட்டும் கொரோனா வார்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் 20 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்

பிரபல ரவுடி வெள்ளபள்ளம் வினோத் மற்றும் அவனது கூட்டாளிக்கு 7ஆண்டுகள் சிறை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Embed widget