Deep Depression: மக்களே உஷார்.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் அதிகரிப்பு...சில மணிநேரங்களிலே புயல்...
15 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 16 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
![Deep Depression: மக்களே உஷார்.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் அதிகரிப்பு...சில மணிநேரங்களிலே புயல்... Increase in the speed at which the deep depression in bay of Bengal moves fast Within a few hours form cyclone Deep Depression: மக்களே உஷார்.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் அதிகரிப்பு...சில மணிநேரங்களிலே புயல்...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/14b0c80570e907e47319eb36634f3a121670413399069571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றது, அதையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
ஆழ்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, சென்னையிலிருந்து கிழக்கே, தென் கிழக்கே வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், தற்போது அதன் வேகம் அதிகரித்து 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து 670 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The Deep Depression over Southwest & adjoining Southeast Bay of Bengal and lay centred at 1130 hours IST of today, the 07th December, 2022 about 750 km east-southeast of Chennai and about 610 km east-southeast of Jaffna (Sri Lanka). pic.twitter.com/jsMbvSNK5E
— India Meteorological Department (@Indiametdept) December 7, 2022
இதையடுத்து சில மணி நேரங்களிலே புயல் உருவாக கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கரையை கடக்கும்:
மேலும் படிப்படியாக புயலாக வலுப்பெற்று, டிசம்பர் 8 ஆம் தேதி காலை வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்க கடலை அடைய வாய்ப்புள்ளது.
இது தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும்.
மழை எச்சரிக்கை:
டிசம்பர் 8 ஆம் தேதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் தென் கடலோர ஆந்திரப் ஒட்டியுள்ள பகுதிகளில் கன முதல் மிக கனமழையுடன் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 7, 2022
டிசம்பர் 9 அன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் மற்றும் வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல, தெற்கு கடலோர ஆந்திராவை ஒட்டிய பகுதியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
10 ஆம் தேதி வட தமிழகம் மற்றும் ராயலசீமா மற்றும் தெற்கு ஆந்திரப் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையுடன் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)