"ஐ.டி ரெய்டில் நான் மிரட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டேன்" - அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேட்டி
வேலு கையூட்டு பெற்றார் என யாராவது ஒருவர் சொல்லட்டும். எதிர்கட்சி உட்பட, நான் பதில் சொல்கிறேன்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
இதனை தொடர்ந்து திருவண்ணாமலை திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு “வருமான வரி துறையினர் என்னை மட்டுமல்லாமல் என்னை சார்ந்தவர்களையும் கடந்த ஐந்து நாட்களாக அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டனர். குறிப்பாக காசா கிராண்டே, அப்பாசாமி ரியல் எஸ்டேட் ஆகியவைகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் இந்த ஐந்து நாட்கள் கற்பனையான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. என் வீட்டில், என் மனைவி வீட்டில், என் மகன்கள் வீட்டில் ஒரு ரூபாய் கூட வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்யவில்லை. அபிராமி தியேட்டர் உரிமையாளர் யார் என்று எனக்கு தெரியாது.
தமிழகத்தில் பிஜேபி கட்சியை சேர்ந்த தொழிலதிபர்கள் வீடுகளில் வருமானவரி துறையினர் சோதனை செய்வது இல்லை. இந்த சோதனையில் தன்னுடைய கழக பணி, தன்னுடைய அரசு பணி ஐந்து நாட்களும் முடங்கியது. இது சம்பந்தமாக உதயநிதி ஸ்டாலின், ஐடி விங் பாஜகவில் ஒரு தனி விண்காகவே ஆகிவிட்டது என கூறினார். நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தொண்டர்களை அச்சுருத்துவது என்ன நியாம். எங்கள் கட்சியில் உள்ள பல அணிகளை போல் வருமான வரித்துறையும் ஒரு அணி. 40/40 தான் எங்கள் நோக்கம் இலக்கு. நாங்கள் திசை திரும்ப மாட்டோம். எனக்கும் அறக்கட்டளைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது எனது அழுத்தமான கருத்து. காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி என இரு நிறுவனத்துக்கும் எனக்கும் துளியும் சம்மந்தம் இல்லை. சோதனை செய்தவர்கள் அம்புதான்; ஏய்ந்தவர்கள் எங்கோ இருக்கிறார்கள். கடந்த 5 நாட்களாக பல தொலைக்காட்சிககளில் என்னை பற்றி பல கட்டுக்கதைகளை கூறி வருகிறார்கள். அவர்களுக்கு நான் தன்னிலை விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். நான் அடிப்படையில் ஒரு விவசாயி. அச்சகம் வைத்து படிப்படியாக வளர்ந்தவர்.
வேலு கையூட்டு பெற்றார் என யாராவது ஒருவர் சொல்லட்டும். எதிர்கட்சி உட்பட, நான் பதில் சொல்கிறேன். 48 ஏக்கர் 33 செட்ன் நிலம் பட்டுமே எனக்கு உள்ளது. காந்திநகர் வீட்டை மருத்துவமனைக்காக லீசுக்கு கொடுத்துள்ளேன். சென்னையில் ஒரே வீடு உள்ளது. இது தான் என் சொத்து. அமைச்சரான பின் ஒரு சென்ட் கூட வாங்கியது இல்லை. உள்ளூர்காரர் என்ற முறையில் கோவை செல்லும் போது ஜெயகுமாரிடம் ஊர்காரர் என பேசுவது தவறா? தனிப்பட்ட முறையில் என் கேரக்டரை ஆசேட் பண்ண முடியாது. நேர்மையானவனாக தலைமைக்கு கட்டுப்பட்டவனாக இருப்பேன். எனது வீட்டிலோ, மகன், மனைவி வீட்டுலோ கல்லூரியிலோ ஒரே ஒரு பைசா எடுத்திருந்தால் சொல்லசொல்லுங்கள். அவர்கள் எதையுமே எங்களிடம் எடுக்கவில்லை. யாரோ வீட்டில் எடுத்ததை எப்படி என் கணக்கில் சேர்க்க முடியும்
இந்தியாவை காப்பாற்றும் பொறுப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு தான் உள்ளது என்ற பேச்சை மாற்றி கூறியிருக்கிறார்கள். சோதனைக்கு இது கூட காரணமாக இருக்கலாம்? மாண்புபிகு வாஜ்பாய் பிரதமாராக இருந்தார். உலகம் புகழ்ந்த மன்மோகன் பிரதமராக இருந்தார். அவர்கள் காலத்தில் வருமாவரித்துறை இல்லையா? ஏன் அவர்கள் சோதனை செய்யவில்லை? நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது என்ற ஒரே காரணத்தை மையப்படுத்தி, தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர் பெருமக்களை அச்சுறுத்துவது என்பது எந்த விதத்தில் நியாயம். ஒன்றை மட்டும் சொல்கிறேன். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மிசாவைப் பார்த்தவர். அவரால் அரவணைக்கப்பட்டவர்கள் நாங்கள். நாற்பதுக்கு நாற்பதை பிடிப்பது மட்டுமே எங்களின் நோக்கம். எனக்கும், 1991-ல் தொடங்கப்பட்ட சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளைக்கும் சம்பந்தம் கிடையாது.
எனது மூத்த மகன்தான் அதன் தலைவராக இருக்கிறார். நிறுவியது மட்டுமே நான். இந்த அறக்கட்டளை மூலமாக கல்வி நிறுவனங்களை நான் தொடங்காமல் போயிருந்தால், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதாவது கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டிருக்குமா? மனசாட்சியுடைய அத்தனைப் பேருக்கும் இது தெரியும்! இந்த வருமானவரி துறையினர் சோதனைக்கு எல்லாம் அஞ்சியவர்கள் நாங்கள் கிடையாது. சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என் பெயரில் 48 ஏக்கர் 33 சென்ட் நிலமும், காந்திநகரில் ஒரு வீடும் தான் உள்ளது. நான் தொடர்ந்து வருமான வரித்துறைக்கு வரி செலுத்தி வருகிறேன். தற்போது நடைபெற்ற இந்த வருமான வரித்துறை சோதனையினால் தான் மற்றும் தன்னை சார்ந்தவர்கள் சிரமத்திற்கு தள்ளப்பட்டோம். ஆதலால் வருமான வரி துறையினரின் மீது தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை” என செய்தளர்களிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்தார்.