ஊட்டியில் ஆளுநர் தலைமையில் தொடங்கிய துணை வேந்தர்கள் மாநாடு - தமிழக அரசின் பிரதிநிதிகள் புறக்கணிப்பு
தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் இல்லாமல் துணை வேந்தர்கள் மாநாட்டினை ஆளுநர் நடத்தி வருவதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
![ஊட்டியில் ஆளுநர் தலைமையில் தொடங்கிய துணை வேந்தர்கள் மாநாடு - தமிழக அரசின் பிரதிநிதிகள் புறக்கணிப்பு Inauguration of the Vice Chancellors Conference chaired by Governor RN Ravi in Ooty ஊட்டியில் ஆளுநர் தலைமையில் தொடங்கிய துணை வேந்தர்கள் மாநாடு - தமிழக அரசின் பிரதிநிதிகள் புறக்கணிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/25/17d4b5aa739ded595a8d17ce72c78c34_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உதகை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மாநாடு துவங்கி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகை உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மாநாடு துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், இந்த மாநாடு 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வளர்ந்து வரும் புதிய உலக ஒழுங்கில் இந்தியாவின் பங்கு, 2047க்குள் இந்தியா உலக தலைவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட யோசனைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டினை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி துவக்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதேஷ் குமார் மற்றும் ஜோஹோ கார்ப்பரேஷன் முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தங்கள் பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களுடன் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை.
அதேசமயம் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் இல்லாமல் துணை வேந்தர்கள் மாநாட்டினை ஆளுநர் நடத்தி வருவதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் சூழலில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை தாக்கல் செய்த போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் இருப்பது ஒட்டுமொத்த மக்களாட்சி தத்துவத்திற்கே எதிரானது. அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தற்போது தலைதூக்கி இருக்கிறது” என அவர் தெரிவித்தார்.
துணைவேந்தர்களை அரசே நியமிக்கலாம்: பேரவையில் தாக்கல் ஆனது சட்டமசோதா
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)