திருடியதை காட்டி கொடுத்த மாணவி - வீடு தேடி வந்து பெட்ரோல் குண்டு வீசிய 4 சிறுவர்கள்... நடந்தது என்ன தெரியுமா ?
விழுப்புரத்தில், வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி மிரட்டல் விடுத்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
விழுப்புரம் : விழுப்புரத்தில் கூலித் தொழிலாளியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 சிறுவர்களை விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
பெட்ரோல் குண்டு வீசிய 4 சிறுவர்கள்
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான பிரதாப் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு, வீட்டினுள் படுத்து உறங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1.45 மணியளவில் இவரது வீட்டில் திடீரென பயங்கர சத்தத்தை கேட்டு அதிர்ச்சியில் எழுந்த பிரதாப் மற்றும் அவரது மனைவி ராசாத்தி ஆகிய இருவரும் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ரகுபதி, மனோஜ், கோகுல், விஷ்னு ஆகிய சிறுவர்கள் வீட்டின் வாயிலில் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி திரிபோடுவதை கண்ட பிரதாப் சிறுவர்களை விரட்டிய போது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதை உங்கள் மீது வீசுவோம் என பிரதாப் மற்றும் அவரது மனைவி ராசாத்தியை ஆகிய இருவரையும் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராசாத்தி, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 சிறுவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரனை செய்ததில் பிரதாப் மகள் பயிலும் பள்ளியில் சிறுவர்களும் பயின்றுவருகிற நிலையில் ரகுபதி பிரதாப்பின் மகள் பையில் இருந்த மோதிரத்தை திருடியதை கண்டுபிடித்து ஆசிரியரிடம் கூறியதால் ஏற்பட்ட பிரச்சனையில் சிறுவர்கள் பிரதாப் வீட்டின் மேல் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்திருத்தப் பள்ளிகள்
19 ஆம் நூற்றாண்டில் குற்றவியல் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை வசதிகள் மற்றும் 1850 இல் தொடங்கி அரசாங்கத்தால் சான்றளிக்கப்பட்டன. சமூகத்தின் மதிப்புகள் மாறியதால், சீர்திருத்தங்களின் பயன்பாடு குறைந்து, அவை பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் . அவர்களின் சில நடைமுறைகளில் இதேபோன்று இருந்தாலும், தொழில்துறை பள்ளிகள் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் குற்றவாளிகளாக மாறுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு மாஜிஸ்திரேட்டுகளின் அதிகாரம்:
சிறைத் தண்டனையை நிறைவேற்றும் வகையில், இளமைக் குற்றவாளி அடைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலையின் பொறுப்பாளர், பதினைந்து வயதை எட்டாத பட்சத்தில், அந்தச் சிறைச்சாலை அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரிடம் அவரைக் கொண்டு வரலாம். மற்றும் அத்தகைய மாஜிஸ்திரேட், அத்தகைய இளமைக் குற்றவாளி, சீர்திருத்தப் பள்ளியின் கைதியாகத் தகுதியான நபராகத் தோன்றினால், எஞ்சியிருக்கும் தண்டனைக் காலத்தை அடைவதற்குப் பதிலாக, அவர் ஒரு சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு, அங்கே காவலில் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தலாம். சட்டப்பிரிவு 8 அல்லது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அதே வரம்புகளுக்கு உட்பட்டது, காவலில் வைத்திருக்கும் காலத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட காலம்.