TN Rain Alert: இன்னைக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. இன்றைய வானிலை நிலவரம்..
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தேவக்கோட்டையில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.07.2023 மற்றும் 11.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவகோட்டை (சிவகங்கை மாவட்டம்) 6, சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்), சின்னக்கலர் (கோவை மாவட்டம்) தலா 5, விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்), வானூர் (விழுப்புரம் மாவட்டம்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி மாவட்டம்), சின்கோனா (கோவை மாவட்டம்) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அதனை தொடர்ந்து தேவாலா (நீலகிரி மாவட்டம்), அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்), வொர்த் எஸ்டேட், செர்முல்லி (நீலகிரி மாவட்டம்), அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம்), கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்), சோலையார் (கோவை மாவட்டம்), வால்பாறை (கோவை மாவட்டம்), லப்பைக்குடிகாடு பெரம்பலூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை மாவட்டம்), மேல் கூடலூர் (நீலகிரி மாவட்டம்), வால்பாறை (கோவை மாவட்டம்) தலா 3, டிஎஸ்எல் ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்), டிஎஸ்எல் தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்), நாகுடி (புதுக்கோட்டை மாவட்டம்), காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்), புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம்), கிளாசெருவை (கடலூர் மாவட்டம்), ஏற்காடு (சேலம் மாவட்டம்), அகரம்கோவில் , திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்), அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்), பார்வூட் (நீலகிரி மாவட்டம்), எறையூர் (பெரம்பலூர் மாவட்டம்) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை இல்லை என்றாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை என்பது கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் எப்போதும் இல்லாத அளவு 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து, அதிகபட்ச வெப்பநிலை என்பது 36.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.