TN Rain Alert: அடுத்து 3 மணிநேரத்துக்கு மழை வெளுக்கும்.. எந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கன மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
01.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
02.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
04.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் காரணத்தால் வெப்பநிலை குறைந்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 36.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பிற மாவட்டங்களில் மழை இருந்தாலும் சென்னையில் வறண்ட வானிலையே இருந்தது.
ஆனால் இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது., சென்னையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிகேணி, தி.நகர், மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, கிண்டி, எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, கோடம்பாக்கம், வடபழனி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான நிலை நிலவுகிறதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.