கரூர் மாவட்டத்தில் ஆளுநரை கண்டித்து தபாலில் சாம்பல் அனுப்பும் போராட்டம்
ஆன்லைன் ரம்மி சூதாட்டம், நீட் தேர்வில் தற்கொலை செய்து கொண்ட நபர்கள் கொண்ட உடல்களில் சாம்பலை. தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்களுக்கு தபால் மூலம் அனுப்பினார்கள்.
கரூர் மாவட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு பெரியார் திராவிட கழக மாவட்டத் தலைவர் தனபால் தலைமையில் ஆளுநரை கண்டித்து தபாலில் சாம்பல் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி, மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று ஆளுநர் ரவியை கண்டித்து ஆன்லைன் ரம்மி சூதாட்டம்,
நீட் தேர்வில் தற்கொலை செய்து கொண்ட நபர்கள் கொண்ட சாம்பலை ஆளுநருக்கு தபால் மூலம் அனுப்ப முயன்றனர்.
தந்தை பெரியார் திராவிட கழகம், திராவிடர் கழகம். சுயேட்சை இந்தியா போன்ற அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, தனியார் மண்டபத்தில் 8 நபர்கள் கைது செய்து கொண்டு சென்றனர்.
கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் டிஎஸ்பி நடராஜன் தலைமையில் கரூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
கரூர் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் டிஎஸ்பி நடராஜன் தலைமையில் கரூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்
அப்பொழுது அங்கிருந்த ஊழியர்களை வெளியே விடாமல் கதவுகளை சாத்திவிட்டு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 15,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அங்குள்ள அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல தரங்கம்பட்டியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் நடைபெற்ற சோதனையில் 10 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டது. இந்த பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அங்கும் விசாரணை நடத்தி வருகின்றனர்.