வெளிநாட்டில் கணவர்; கார் வாங்க சென்ற இடத்தில் கனெக்ஷன் - பெண்ணின் உறவினர்களிடம் செம்மையாக வாங்கிய நபர்!
கரூரில் கார் வாங்க சென்றபோது ஏற்பட்ட பழக்கம். கணவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் திருமணத்தை மீறிய உறவு. பெண்ணின் உறவினர்கள் ஒன்று கூடி சம்பந்தப்பட்ட நபரை சாலையில் தரதரவென அடித்து இழுத்து வந்ததால் பரபரப்பு.

கரூரில் கார் வாங்க சென்றபோது ஏற்பட்ட திருமணத்தை மீறிய பழக்கத்தால் பெண் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண்ணின் உறவினர்கள் ஒன்று கூடி ஏமாற்றிய நபரை சாலையில் தரதரவென அடித்து இழுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் வடிவுக்கரசி (வயது 35). இவருக்கு விஜய் என்ற நபருடன் திருமணம் ஆகி 10 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாக கார் ஷோரூம் ஒன்றில் புதிய கார் வாங்குவதற்காக குப்புசாமி, வடிவுக்கரசி இருவரும் சென்றுள்ளனர். அங்கு சசி என்ற நபர் கார் மாடல்கள் தற்போது குறைவாக உள்ளதாகவும், புதிய மாடல்கள் குறித்து தகவல் தெரிவிப்பதாக வடிவுக்கரசியின் முழு விபரங்களை பெற்று திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.

இதில் அவருக்கும் வடிவுக்கரசிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில், கணவன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் வீட்டை விட்டு வெளியேறி சசியுடன் வடிவுக்கரசி சென்றுள்ளார். சசிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வடிவுக்கரசி குடும்பத்தினரிடமிருந்து 30 லட்சம் வரை பணம் பெற்று சசியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. சசி மற்றும் வடிவுக்கரசி கரூரில் சவர்மா உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வடிவுக்கரசியின் அப்பா குப்புசாமி மற்றும் உறவினர்கள் அந்த கடைக்கு இன்று நேரில் சென்று தங்களது குடும்பத்தை சீரழித்து விட்டதாக கேள்வி எழுப்ப, சசி தகாத வார்த்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வாக்குவாதம் முற்றி, சசியை உறவினர்கள் ஒன்று கூடி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மடவளாகம் பகுதியில் அடித்து தரதரவென சாலையில் இழுத்து வந்துள்ளனர். இதில் சசிக்கு மண்டை உடைப்பு ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த கரூர் மாநகர காவல் துறையினர் விரைந்து வந்து சசியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து குப்புசாமி மற்றும் அவரது உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---------------------------------------
கட்டையால் அடித்து கொலை மிரட்டல் ஒருவர் கைது.
தோகைமலை அருகே கீரனூர் ஊராட்சி சாமி பிள்ளையார் புதுரை சேர்ந்தவர் முனியப்பன் 37. இவர் தனது புதிய வீட்டின் கட்டடத்திற்கு தண்ணீர் எடுத்து உள்ளார். அப்போது வழிந்தோடிய தண்ணீர் வீதியில் தேங்கியுள்ளது. இது குறித்து அதே வழியில் உள்ள இளையராஜா மற்றும் அவரது மனைவி அருள்ஜோதி ஆகியோர் தண்ணீர் எப்படி வீதிக்கு வரலாம். என்று முனியப்பன் உடன் தகராறு செய்து கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முனியப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து இளையராஜாவை கைது செய்தனர். அருள்ஜோதியை தேடி வருகின்றனர்.
-----------------------
நெடுஞ்சாலைகளில் எச்சரிக்கை குறியீடுகள் இல்லாததால் விபத்து.
கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் முன்னெச்சரிக்கை குறியீடுகள், ஜீப்ரா லைன், ரிப் லெட்டர்கள் ஆகியவை இல்லாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். கரூரில் இருந்து செல்லும் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் விபத்துகளை தடுக்கும் வகையில் முக்கியமான இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில் ஜீப்ரா லைன் எனப்படும் வெள்ளை பெயிண்ட் அடிக்க வேண்டும். ஆனால் வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் அடிக்கப்படவில்லை. இதனால், கோவை, ஈரோடு, மதுரை, சேலம், சாலைகளில் அடிக்கடி சென்டர் மீடியன் மீது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. சென்டர் மீடியன் தொடங்கும் இடம் நடுவில் பாதை விடப்பட்டுள்ள இடம் முடியும் இடம் ஆகியவற்றில் ட்ரிப் லெட்டர்களை பொருந்தாத நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் விபத்துக்கள் தொடர்ந்து நடக்கின்றன. இனியாவது விபத்தை தடுக்கும் நோக்கில் ரிப்ளெக்டர்களை பொருத்தவும் ஜீப்ரா கோடுகளை வரையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















