மேலும் அறிய
Advertisement
Tamil news | ராமேஸ்வரம் கோயிலுக்கு கூடுதல் போலீஸ்... ஜல்லிக்கட்டு போட்டிக்கு பந்தகால் - தென் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இன்மையால் அணையில் 138 அடிக்கு கீழ் நீரின் அளவு குறைந்துள்ளது.
1. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக நாளை முதல் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிப்பு
2. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோயிலில் உளவுத்துறை எச்சரிக்கையால் அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
3.உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகிற 16-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.
4. சிவகங்கை மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகை 1,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
5. சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரியில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு காளைகளுக்கு சலங்கை மணிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
6. சிவகங்கை மாவட்டம், பூவந்தியில் பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானை அதிகளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
7. மதுரையில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்த முயன்ற ஷகில் அகமது என்பவர் கைது செய்யப்பட்டார். மண்ணெண்ணெய் அடுப்பில் மறைத்து வைத்து கடத்த முயன்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
8. இன்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கோவிட் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியினை வணிகவரி மற்றும் பதிவித்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
9. தென் மாவட்டங்களுக்கு நீராதாரமா விளங்கும் முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இன்மையால் அணையில் 138 அடிக்கு கீழ் நீரின் அளவு குறைந்துள்ளது.
10. நீதிமன்ற உத்தரவுப்படி ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். வேட்புமனுவில் சொத்து விவரங்களை தவறான தகவல் தந்த புகாரில் வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிலானி என்பவரது வழக்கில் தேனி சிறப்பு நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய 7-ம் தேதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion