மேலும் அறிய
Advertisement
Tamil news | கள்ளக்காதலால் அதிகரித்த கொலை...! உடும்பு பிடித்தவர் கைது...! - தென்மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் 200 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் வசூல் செய்து வருகின்றனர்.
1. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ராம்கோ நியாயவிலைக் கடையில் இருந்து லாரி மூலம் கடத்தி செல்லப்பட்ட 113 மூடைகளில் 5650 கிலோ ரேசன் அரிசியை போலீசார் மடக்கிப் பிடித்து 2 பேரை கைது செய்தனர்.
2. ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு, காதல் விவகாரத்தால் நடந்த கொலைகள் 2021 அதிகரித்துள்ளதாகவும், ஒழுக்கமின்மை அதிகரிப்பால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, எஸ்.பி., கார்த்திக் தெரிவித்தார்.
3. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 57,000 - மதிப்புள்ள 7200 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக காரில் ஏற்றி வந்த 2 பேர் கைது - புகையிலை பாக்கெட்டுகள், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ரூபாய் 33,000 - பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
4. பயணிகளின் வசதிக்காக திருச்செந்தூர் - பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் மற்றும் திருநெல்வேலி - திருச்செந்தூர் - திருநெல்வேலி விரைவு சிறப்பு ரயில் ஆகியவற்றில் தலா இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் கூடுதலாக இணைக்க மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் உத்தரவிட்டுள்ளார்.
5. மதுரை - ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயில்கள் டிசம்பர் 30 முதல் ராஜகம்பீரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மதுரை - ராமேஸ்வரம் (06655) மற்றும் ராமேஸ்வரம் - மதுரை (06654) முன்பதிவில்லா விரைவு ரயில்கள் ராஜகம்பீரம் ரயில் நிலையத்திலிருந்து முறையே இரவு 07.00 மணி மற்றும் காலை 08.14 மணிக்கு புறப்படும்.
6. இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு. இந்த மனு உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
7. சிவகங்கை மாவட்ட வன அலுவலர்கள் தேவகோட்டை அருகே சிறுகானூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் வட கீழ்குடியைச்சேர்ந்த கருப்பையா சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த பையை வனத் துறையினர் திறந்து பார்த்தபோது, 2 உடும்புகள் உயிரோடு இருந்தன. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டு உடும்புகளும் சங்கரபதி காட்டுக்குள் விடப்பட்டன.
8. நெல்லையில் போலீசார் அதிரடி ; மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் 200 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் வசூல் செய்து வருகின்றனர்.
9.திண்டுக்கல் திருநகர் பகுதியில் தலைமை தபால் நிலையத்தில் பணிபுரியும் உதவி தலைமை நிலைய அதிகாரி மணிமாறன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 25பவுன் நகை கொள்ளை மேலும் திருடிய சுவடுகள் தெரியாமல் இருப்பதற்காக வீட்டை கொளுத்தி விட்டு (தீ வைத்து விட்டு) சென்ற திருடர்கள். இதனால் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம். நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை.
10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 7 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75675-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 3 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 744827-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1186 இருக்கிறது. இந்நிலையில் 62 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion