11 AM Headlines: 5 மாநிலங்களில் என்.ஐ.ஏ., சோதனை, விஜய்க்கு எதிரான திமுகவின் பிளான் - டாப் 10 செய்திகளின் ரவுண்ட்-அப்
11 AM Headlines: உள்ளூர் முதல் உலக நாடுகளை வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.
அக்.15 முதல் வடகிழக்கு பருவமழை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய கனமழை. தமிழ்நாட்டில் அக்டோபர் 9ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாகவும் தகவல்
விஜய்க்கு எதிராக பிரகாஷ்ராஜை களமிறக்கும் திமுக?
2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், உதயநிதி Vs திமுக என்றே போட்டி நிலவும் என கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் பரப்புரையின் போது விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ களமிறக்க திமுக திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீர் வரத்து அதிகரிப்பால் ஆர்பரிக்கும் ஒகேனக்கல்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், ஒகேனக்கலுக்கு வரும் நீரின் வரத்து 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி ஃபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
5 மாநிலங்களில் 22 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. உளவு தகவலின் அடிப்படையில்,ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் 22 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. பயங்கரவாத சதித்திட்டம் பற்றிய விசாரணையின் முக்கிய முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடந்து வருகிறது.
இந்தியாவில் வேலையின்மை எனும் நோயை பரப்பியுள்ளது பாஜக - ராகுல் காந்தி
இந்தியாவில் வேலையின்மை எனும் நோயை பரப்பியுள்ளது பாஜக. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பெரும் ஆபத்தில் உள்ளது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் சிறு தொழில்களின் முதுகெலும்பை பாஜக அரசு உடைத்துவிட்டது. ராணுவத்தில் சேர தயாராகும் இளைஞர்களின் கனவை அக்னிபாத் என்ற திட்டம் மூலம் சிதைத்துவிட்டது - ராகுல் காந்தி
செபி தலைவருக்கு சம்மன்
அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தில், அக்.24ம் தேதி செபி தலைவர் மாதபி பூரி புச் ஆஜராக நாடாளுமன்ற பொது கணக்குக் குழு சம்மன். அதானி குழுமம் முறைகேடாக முதலீடுகளை ஈர்க்க உதவியதாக, செபி தலைவர் மீது ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : டிசம்பர் மாதம் சோதனை ஓட்டம்
ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருப்பதுபோல், இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை தயாரிக்க திட்டம். சென்னை ICF தொழிற்சாலையில், ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் ரயில் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே 35 ஹெரிடேஜ் ரயில்களை உருவாக்கவுள்ளது. ஒவ்வொரு ரயிலும் ரூ.80 கோடி செலவில் தயாரிக்கப்படும். வடக்கு ரயில்வேயின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் இந்த ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
பிரம்மோற்சவம் கோலாகல தொடக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் புரட்டாசி மாத பிரம்மோற்சவம் நேற்று கோலாகல தொடக்கம். நாதஸ்வர இசை முழங்க, யானைகள் அணிவகுக்கக் கொடியேற்றத்துடன் ஊர்வலம் நடைபெற்றது. 14வது முறையாக ஏழுமலையானுக்குப் பட்டாடைகளை தலையில் சுமந்து காணிக்கையாகச் சமர்ப்பித்தார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் போர் பதற்றம்
இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. ஏமனில் ஹவுதி அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரிப்பு. ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது
நியூசிலாந்து அணி வெற்றி
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது நியூஸிலாந்து. 161 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, 19வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது.