மேலும் அறிய

TN RAIN: தமிழ்நாட்டில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நாகை, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி போன்ற பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பேரிடர் மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

கடும் அவதி : 

டெல்டா மாவட்டங்களில் விடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சில பகுதிகளில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தேனியில் உள்ள வைகை அணையில் விநாடிக்கு 4,230 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை :

சென்னை போன்ற பெருநகர பகுதிகளில்  விட்டு விட்டு கனமழை கொட்டி வருகிறது. இன்று  அதிகாலையிலும் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டியது. ஆனாலும், மாநகராட்சியின் சீரான நடவடிக்கை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், வடசென்னை பகுதிகளில் ஆங்காங்கே முழங்கால் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வருகிறது. ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால், உடனடியாக நீரை அகற்றுவதோடு அங்குள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


TN RAIN: தமிழ்நாட்டில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

படிப்படியாக மழை குறையும் :

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் படிப்படியாக தமிழகத்தில் மழையும் குறையும் எனவும் கணித்துள்ளது. அதைதொடர்ந்து வரும் 16ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அதன் காரணமாக 17ம் தேதி முதல் மீண்டும் மழை அதிகரிக்க கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடகடலோரம் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, செங்கல்பட்டு, வாலாஜாபாத்,நெமிலி,சோளிங்கர்,உத்திரமேரூர்,வண்டலூர் மற்றும் திருப்போரூர் ஆகிய பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செய்யூர், காஞ்சிபுரம் , திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் அதிகபட்சமாக திருத்தணியில் 13 செ.மீ., குப்பநத்தம் பகுதியில் 12 செ.மீ., கொடிமுடி பகுதியில் 11.7 செ.மீ., மதுராந்தகத்தில் 11 செ.மீ. மற்றும் திண்டிவனத்தில் 10 செ.மீ. அளவிற்கும் மழை பதிவாகியுள்ளது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
400 தவெக வாக்குறுதிகளில் 40 கூட நிறைவேற்றப்படலை; ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைப்பா? அன்புமணி விமர்சனம்
400 தவெக வாக்குறுதிகளில் 40 கூட நிறைவேற்றப்படலை; ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைப்பா? அன்புமணி விமர்சனம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget