IIT Madras: பட்டியலின மாணவி பாலியல் வன்கொடுமை: 9 மாதங்களுக்கு பிறகு மாணவர் கைது !
சென்னை ஐஐடி பட்டியலின மாணவி கொடுத்த பாலியல் புகாரில் 9 மாதங்களுக்கு பிறகு மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடியில் பட்டியலினத்தை சேர்ந்த மாணவி உயர் சாதி இந்துக்கள் என்று கூறப்படும் பிரிவை சேர்ந்த உதவி பேராசிரியர் மற்றும் மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்து 9 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐஐடியை சேர்ந்த முன்னாள் மாணவர் ஒருவரை சென்னை காவல்துறையின் தனிப் படையினர் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கிங்ஷூக் தேப்சர்மாவை மயிலாப்பூர் காவல்துறையினர் கொல்கத்தாவில் வைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து வாரண்ட் கிடைத்த பிறகு கிங்ஷூக்கை சென்னை அழைத்து வரப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் பட்டியலினத்தை சேர்ந்த மாணவி உயர் சாதி இந்துக்கள் என்று கூறப்படும் பிரிவை சேர்ந்த உதவி பேராசிரியர் மற்றும் மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார்
— Raja Shanmugasundaram (@SRajaJourno) March 25, 2022
மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்து 9 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு@imanojprabakar
இந்த விவகாரத்தில் அனைத்திந்திய மாதவர் சங்கத்தினர், “போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் பிரிவு 376 மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதியாததற்கு எதிர்ப்பு” தெரிவித்தனர். இந்த வழக்கில் 9 மாதங்களுக்கு மேலாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. இந்தச் சூழலில் தற்போது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று பலரும் முறையிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்