HUSHPURR இந்தியாவின் பெண்களுக்கான பொருட்கள் அறிமுகம் - நடிகை ஆலியா மானஸா பங்கேற்பு
HUSHPURR இந்தியா நிறுவனத்தின் பெண்களுக்கான பொருட்களை சின்னத்திரை நடிகை ஆலியா மானஸா, ஹெராவி பிங்க் ஸ்டோரின் நிறுவனர் ஆர். ராதாகிருஷ்ணன், இணை நிறுவனர் கே. வெங்கடேஷ் அறிமுகப்படுத்தினர்.
சென்னை தாஜ் கிளப் ஹவுசில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹெராவி பிங்க் ஸ்டோர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெண்களுக்கான 20 ஆரோக்கிய தயாரிப்புகளை "HUSHPURR” என்ற பிராண்டின் கீழ் அறிமுகப்படுத்தியது.
மகளிர் நலன் சார்ந்த பொருட்கள்:
இந்த பொருட்கள் மகளிர் நலன் சார்ந்த, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கக்கூடியவை.
இதனை பிரபல சின்னத்திரை நடிகையும் சமூக ஊடக பிரபலமுமான ஆல்யா மானஸா, ஹெராவி பிங்க் ஸ்டோர் பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ராதாகிருஷ்ணன் மற்றும் இணை நிறுவனரும் இயக்குனருமான வெங்கடேஷ் ஆகியோருடன் சேர்ந்து அறிமுகப்படுத்தினார்.
ஹெராவி பிங்க் ஸ்டோர் பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ராதாகிருஷ்ணன், 25 ஆண்டு கால கார்ப்பரேட் அனுபவத்துடன் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் தனித்துவமான ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் நம்பிக்கையும் கொண்டவர். தொழில்துறையின் ஆழமான புரிதலுடன், இந்தியாவின் ஆரோக்கிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி அதில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.
தென்னிந்தியாவில் 125 ஸ்டோர்கள்:
அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனருமான வெங்கடேஷ், புகழ்பெற்ற தொழில்முனைவோர் ஆவார். முதல் கட்டமாக தென்னிந்தியாவில் 125 ஸ்டோர்களுக்கான உரிமம் தொடங்கப்பட்டு, 2025-26 ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் 1000 பெண் தொழில்முனைவோர்கள் மூலம் உலகளாவிய பிராண்டாக இதனை மாற்றுவதற்கு இவ்விருவரும் உறுதி எடுத்துள்ளனர்.