மேலும் அறிய

கள்ளக்காதலால் மனைவிக்கு மனக்கொடுமையை ஏற்படுத்தும் கணவனுக்கு சிறைத்தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம்

கள்ளக்காதலால் குடும்பத்தில் கடுமையான சண்டை ஏற்பட்டு மனைவிக்கு மனக்கொடுமையை ஏற்படுத்தினால், கணவன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011ம் ஆண்டு கள்ளக்காதல் வழக்கின் விசாரணை ஒன்றில் கணவனுக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்திருந்தது. இந்த வழக்கின் மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி பரதசக்கரவர்த்தி விசாரித்தார்.

அப்போது, வழக்கின் விசாரணையை கேட்ட நீதிபதி திருமணத்திற்கு மீறிய உறவு ( கள்ளக்காதல்) திருமணமான தம்பதியினரிடையே கடுமையான குடும்பச் சண்டையை ஏற்படுத்தினால், இந்திய தண்டனைச் சட்டம் ஐ.பி.சி. 498ன் ஏ பிரிவின்கீழ் மனைவிக்கு மனக்கொடுமையை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

கள்ளக்காதலால் மனைவிக்கு மனக்கொடுமையை ஏற்படுத்தும் கணவனுக்கு சிறைத்தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம்

மேலும், நீதிபதி தனது தீர்ப்பில் ஒட்டுமொத்தமாக அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, கடுமையான மன அதிர்ச்சியை ஏற்படுத்திய மற்றும் மனைவியின் மன ஆரோக்கியத்தை பாதித்த திருமணத்திற்கு புறம்பான உறவின் குற்றம் சாட்டப்பட்டவரின் நடவடிக்கை ஐ.பி.சி. 498 ஏ பிரிவின் கீழ் நிச்சயமாக அவருககு கொடுமையாக இருக்கும் என நம்புவதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெரோன் பாண்டி என்ற நக்கீரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை 6 மாதமாக குறைத்தார்.  

கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கே.வி.பிரகாஷ்பாபு என்பவர் தொடர்புடைய வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், திருமணத்திற்கு புறம்பான உறவு மனைவியை மனக்கொடுமைக்கு  ஆளாக்குவதாக அமையாது என்று கூறி உத்தரவிட்டிருந்தார். மேலும், தீர்ப்பை முழுமையாக படிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும், அந்த தீர்ப்பில் ஒருவர் கூடுதல் தாம்பத்ய உறவில் ஈடுபட்டிருப்பதாலும், மனைவியின் மனதில் சில சந்தேகங்கள் இருப்பதாலும், பிரிவின் கீழ் தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற குற்றத்தை  ஈர்ப்பதை மனக்கொடுமையாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கள்ளக்காதலால் மனைவிக்கு மனக்கொடுமையை ஏற்படுத்தும் கணவனுக்கு சிறைத்தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம்

மேலும், உச்சநீதிமன்றத்தின் அந்த தீர்ப்பில் மனக்கொடுமை பற்றிய கருத்து, சம்பந்தப்பட்டவர்களின் சமூக அடுக்கு, அவர்களின் தனிப்பட்ட கருத்து, அவர்களின் சகிப்புத்தன்மை மற்றும் உணர்திறன் அளவைப் பொறுத்தது என்று கூறியிருந்தது. அதை பொதுமைப்படுத்துவது கடினம் என்றும் கூறியிருந்தது.

மேலும் படிக்க : TN Urban Local body elections 2022: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட அதிமுக !

மேலும் படிக்க : மேட்டூர் அணையின் நீர்வரத்து 846 கன அடியில் இருந்து 895 கன அடியாக அதிகரிப்பு.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Stalin:
"வன்னியர் விரோதி ஸ்டாலின்"... கொதிப்பில் வடதமிழகம்; கடும் கோபத்தில் ராமதாஸ்
முடிவுக்கு வரும் ஆதவ் அர்ஜுனா ஆட்டம்? - உடைகிறதா விசிக? திக்குமுக்காடும் திருமா? 
முடிவுக்கு வரும் ஆதவ் அர்ஜுனா ஆட்டம்? - உடைகிறதா விசிக? திக்குமுக்காடும் திருமா? 
நம்பிக்கையை இழந்த சீமான் - நாசமாகும் நாம் தமிழர் கட்சி - ரணகளமான செய்தியாளர் சந்திப்பு - நடந்தது என்ன?
நம்பிக்கையை இழந்த சீமான் - நாசமாகும் நாம் தமிழர் கட்சி - ரணகளமான செய்தியாளர் சந்திப்பு - நடந்தது என்ன?
Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!
Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NTK Cadres Fight : ‘’ஏய்..நீ வெளிய போடா!’’நாதக நிர்வாகிகள் கடும் மோதல்! போர்க்களமான PRESSMEETVCK vs PMK : ’’அப்பா மாதிரியே புள்ள..வன்னிய விரோதி ஸ்டாலின்!’’ ராமதாஸ் ஆவேசம்Maharashtra Rahul Gandhi : காங்கிரஸ் உக்கிரம் ஆட்சியை பிடிக்க ஒரே FORMULA கட்டம் கட்டிய ராகுல்!S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Stalin:
"வன்னியர் விரோதி ஸ்டாலின்"... கொதிப்பில் வடதமிழகம்; கடும் கோபத்தில் ராமதாஸ்
முடிவுக்கு வரும் ஆதவ் அர்ஜுனா ஆட்டம்? - உடைகிறதா விசிக? திக்குமுக்காடும் திருமா? 
முடிவுக்கு வரும் ஆதவ் அர்ஜுனா ஆட்டம்? - உடைகிறதா விசிக? திக்குமுக்காடும் திருமா? 
நம்பிக்கையை இழந்த சீமான் - நாசமாகும் நாம் தமிழர் கட்சி - ரணகளமான செய்தியாளர் சந்திப்பு - நடந்தது என்ன?
நம்பிக்கையை இழந்த சீமான் - நாசமாகும் நாம் தமிழர் கட்சி - ரணகளமான செய்தியாளர் சந்திப்பு - நடந்தது என்ன?
Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!
Anti Drug Club: போதைப்பொருளுக்கு செக்: பள்ளி, கல்லூரிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்த தமிழக அரசு!
Madurai: விஜயின் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் இல்லை - கே.பாலகிருஷ்ணன்
விஜயின் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்குள் எந்த சலசலப்பும் இல்லை - கே.பாலகிருஷ்ணன்
CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்களுடன் வரும் முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்களுடன் வரும் முதல்வர் ஸ்டாலின்!
TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!
TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!
தனக்குத் தானே செல்ஃப் சார்ஜிங் செய்து கொள்ளும் Bike -  போடி இளைஞர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு
தனக்குத் தானே செல்ஃப் சார்ஜிங் செய்து கொள்ளும் Bike - போடி இளைஞர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு
Embed widget