வானிலை மையத்தின் அறிவிப்புகளை எப்படி புரிந்துகொள்வது..? சொற்களும்...விளக்கமும்..!
வானிலை மையத்தின் அறிவுப்புகளை எப்படி புரிந்து கொள்வது என்பதை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
வானிலை மையத்தின் அறிவிப்புகள்:
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. பருவமழை தொடங்கிவிட்டாலே வானிலை அறிவிப்புகள் மிகவும் முக்கியத்துவம் பெறும். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதைத் தாண்டி அலுவல்கள் மற்றும் பயணங்களைத் திட்டமிடுவதற்கும் வானிலை முன்னறிவிப்புகள் பயனுள்ளதாக இருக்கும். வானிலை அறிக்கையின் போது குறிப்பிடப்படும் வார்த்தைகளை எப்படி புரிந்துகொள்வது என்பது பற்றி பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை வட தமிழகம், தென் தமிழகம், உள் தமிழகம், வட உள் தமிழகம், தென் உள் தமிழகம், கடலோர தமிழகம், வட கடலோர தமிழகம், தென் கடலோர தமிழகம், டெல்டா மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் என்று 11 வகைகளாகப் பிரித்துள்ளனர்.
இதில் வட தமிழக மாவட்டங்களில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் கடலூர் விழுப்புரம் திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தருமபுரி சேலம் நாமக்கல் கரூர் ஈரோடு தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் புதுக்கோட்டை நீலகிரி கோவை திருப்பூர் திருச்சிராப்பள்ளி அரியலூர் பெரம்பலூர் ஆகியவை அடங்கும்.
11 வகைகளாக பிரிக்கப்படும் மாவட்டங்கள்:
தென் தமிழக மாவட்டங்களில் திண்டுக்கல் தேனி விருதுநகர் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் தூத்துக்குடி தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அடங்கும் உள் தமிழக மாவட்டங்களில் திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி தருமபுரி சேலம் நாமக்கல் கரூர் ஈரோடு நீலகிரி கோவை திருப்பூற் திருச்சிராப்பள்ளி அரியலூர் பெரம்பலூர் சிவகங்கை விருதுநகர் தேனி திண்டுக்கல் மதுரை தென்காசி ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
வட உள் தமிழக மாவட்டங்களில் திருப்பத்தூர் வேலூர் ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி தருமபுரி சேலம் நாமக்கல் கரூர் ஈரோடு நீலகிரி கோவை திருப்பூர் திருச்சிராப்பள்ளி அரியலூர் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும். தென் உள் தமிழக மாவட்டங்களில் சிவகங்கை விருதுநகர் தேனி திண்டுக்கல் மதுரை தென்காசி ஆகிய மாவட்டங்கள் அடங்கும்
கடலோர தமிழக மாவட்டங்களில் திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் புதுக்கோட்டை ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அடங்கும் வடகடலோர தமிழக மாவட்டங்களில் திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் தஞ்சாவூர் திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
மழைப்பொழிவு:
தென்கடலோர மாவட்டங்களில் ராமநாதபுரம் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அடங்கும். டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகள் அடங்கும். டெல்டா மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை புதுக்கோட்டை காரைக்கால் திருச்சிராப்பள்ளி பெரம்பலூர் அரியலூற் கடலூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும். மாவட்டங்களைப் போலவே மழைப்பொழிவையும் 5 வகைகளாகப் பிரித்துள்ளனர். அதில் பெரும்பாலான இடங்கள் என்றால் 76 முதல் 100 சதவீத இடங்களிலும், அநேக இடங்கள் என்றால் 51 முதல் 75 சதவீத இடங்களிலும், ஒரு சில இடங்கள் என்றால் 26 முதல் 50 சதவீத இடங்களிலும், ஓரிரு இடங்கள் என்றால் 1 முதல் 25 சதவீத இடங்களில் மழை பெய்யும் என்றும் மழைப்பொழிவின் பரவல் பிரிக்கப்பட்டுள்ளது.
மழைப்பொழிவின் தீவிரமானது 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1 செ.மீ வரையிலான மழை லேசான மழை என்றும், 2 முதல் 6 செ.மீ வரையிலான மழை மிதமான மழை என்றும், 7 முதல் 11 செ.மீ வரையிலான மழை கன மழை என்றும், 12 முதல் 20 செ.மீ வரையிலான மழை மிக கன மழை என்றும், 21 செ.மீ மேல் பெய்யும் மழை அதி கன மழை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.